Contents show
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார்).
- தமிழ் மொழியை உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும் என முழக்கம் இட்ட முதல் சான்றோர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார்.
- தமிழின் முக்கியத்துவம். அது ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது என்றார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதை நாடக காப்பியம் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் ஒரு வரியில் கூறியவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- சிலப்பதிகாரத்துக்கு வேறு யாரும் தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தை போன்று திறனாய்வு எழுதியதில்லை.
- மொழி ஆய்விலே உலகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை, வளர்ச்சியைத் தமிழுக்குச் செயல்படுத்திக் காட்டியவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம் தமிழ் மொழியில் திறனாய்வு ஒப்பிலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளில் வல்லுநராக விளங்கினார்.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம் எழுதிய நூல் தமிழ் மொழி வரலாறு (ஆங்கிலத்தில் எழுதப்பட்டது).
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தமிழ்மொழி வரலாற்றை விளக்க சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேனாட்டு அறிஞர்களுக்குத் ஆற்றிய உரையே தமிழ் மொழி வரலாறு (History of Tamil Language).
- 1934ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நடத்தினார்.
தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் சிறப்பு பெயர்கள்
- பன்மொழிப்புலவர்
- நடமாடும் பல்கலைக்கழகம்
- குருதேவர்
- பல்கலைச் செல்வர்
- பெருந்தமிழ்மணி
- மின்வெட்டுப் பேராசிரியர்
- தெ. பொ. மீனாட்சிசுந்தரத்திற்கு பல்கலைச் செல்வர் என்ற விருதினை தருமபுர ஆதினம் அளித்து சிறப்பித்தது.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரத்திற்கு பன்மொழிப் புலவர் என்ற விருதினை குன்றக்குடி ஆதீனம் அளித்தது.
தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பெற்றுள்ள விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- இந்திய அரசின் பத்ம பூஷண் விருது
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பணியாற்றினார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம், யுனெஸ்கோவின் கூரியர் எனும் இதழ் குழுவின் தலைவராக விளங்கினார்.
- சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பு ஏற்றார்.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமித்தார். அண்ணாமலை அரசர்,
- அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழின் புகழ் பரப்பியவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பணியாற்றியுள்ளார்.
- ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
- சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பணியாற்றியவர்.
- தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் குரு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.
தெ. பொ. மீனாட்சிசுந்தரத்தின் கூற்றுகள்
“ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞர் உலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன”
-தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
“ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால், பிறமொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும்”
– தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
பிறவற்றை அறியாமலோ. தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது”.
– தெ. பொ. மீனாட்சிசுந்தரம்.
சி. இலக்குவனார்
- “எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்”சி.இலக்குவனார்.
- ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயே நடத்தப்படவேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்பியவர் சி.இலக்குவனார்.
- தொல்காப்பியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆகையால் தொல்காப்பியம் என்ற புனைப்பெயர் கொண்டவர் சி.இலக்குவனார்.
- தொல்காப்பியத்தை ஆய்வு செய்து, தொல்காப்பியத்தின் காலம் கி.மு.7 ஆம் நூற்றாண்டே என்று ஆதாரங்களோடு மெய்ப்பித்தவர் சி.இலக்குவனார்.
- சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தவர் சி.இலக்குவனார்.
- மதுரையில் தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார் சி. இலக்குவனார்.
- சி.இலக்குவனார், 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்வும் பணி நீக்கமும் பெற்றவர்.
- புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்த வார இதழ் சி.இலக்குவனார் நடத்திய சங்க இலக்கியம்.
சி.இலக்குவனார் பெற்ற பட்டங்கள்
- தமிழ் அரிமா
- இரண்டாம் நக்கீரர்
- பயிற்சிமொழிக் காவலர்
- தமிழர் தளபதி
- தமிழ் காத்த தானைத் தலைவர்
- இலக்கணச் செம்மல்
- செந்தமிழ் மாமணி
- 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர்
- இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி
- முத்தமிழ்க் காவலர்
- தமிழ்ப் போராளி
- தன்மானத் தமிழ் மறவர்
- பெரும் பேராசிரியர்
- செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல்
சி. இலக்குவனார் நடத்திய இதழ்கள்
- சங்க இலக்கியம்
- திராவிடக்கூட்டரசு (ஆங்கில இதழ்)
- குறள் நெறி (ஆங்கில இதழ்)
- பேராசிரியர் சி. இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி. சங்க இலக்கிய ஆராய்ச்சி, மொழியியல் இலக்கணம், எனப் பல்வேறு பொருள்களில் நூல்கள் இயற்றியுள்ளார்.
தொல்காப்பியமே துணை
- “இன்று நமக்கு கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்கு துணை புரிவதாகும்.
- இதனைத் தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர்.
- இது இலக்கண நூல் தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று, அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சியும் பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல். வாழ்வியல். முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது”
– சி.இலக்குவனார்
கலைஞர் மு. கருணாநிதி தொடர்பு
- கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்ற போது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர் சி. இலக்குவனார்.
- தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் சி. இலக்குவனார் என்று நெஞ்சுக்கு நீதி நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
- சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி ஆகும்.
- சி. இலக்குவனார், 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கு காமராசரை எதிர்த்துப் போட்டியிட்ட G. D. நாயுடுவை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பேசியது
- “தமிழ் மொழிக்காகப் போராடி வரும் மாணவர்களிடம் போய் போராட்டத்தை நிறுத்து என்று சொல்பவன் நல்ல ஆசிரியனும் அல்லன், அதுபோல் பிறர் பேச்சைக் கேட்டு போராட்டத்தை நிறுத்துபவன் நல்ல மாணவனும் அல்லன்”
-சி.இலக்குவனார்