தொலைஉணரி (Remote Sensing):
- தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றம் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும்
தொலை உணர்வியின் பயன்கள்:
- விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது.
- வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது.
- மண்ணின் ஈரப்பதத்தை தீர்மானிக்க உதவுகிறது, பயிர் உற்பத்தியை மதிப்பிட முடியும்.
- நகரப்பகுதி வளர்ச்சி மற்றும் வேளாண் நிலம் அல்லது காடுகளில் பல வருடங்களில் நிகழும் மாறுபாடுகளையும் கண்காணிக்க உதவுகிறது.
- கடலடிமட்டம் மற்றும் அவற்றின் வளங்களையும் படமிடப் பயன்படுகிறது.
- இயற்கை வளங்களை காண உதவுகிறது.
- பனிப்பாறை உருகுதல் மற்றும் கடல் மட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி படிக்க உதவுகிறது.
- இராணுவ கண்காணிப்பிற்கு பயன்படுத்தலாம்.