நகரமயமாதல் என்றால் என்ன? இந்தியாவில் நகர்மயமாதலில் உள்ள சிக்கல்களை விவரித்து எழுதுக.

நகரமயமாதல்

  • நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும்.
  • நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும்.

இந்தியாவில் நகர்மயமாதலில் உள்ள சிக்கல்கள்:

  • உலகளவில் குறைவான நகர்மய நாடாக 31.16% (மக்கள்
  • தொகை கணக்கெடுப்பு 2011) மக்கள் தொகையுடன் இந்தியா விளங்குகிறது.
  • மோசமான நகர ஆளுகையே நகர்புற சிக்கல்களுக்கு முக்கிய காரணம்.

நகர பெருக்கம்:

  • குறுகிய இடத்தில் அதிக மக்கள் வசித்தல்.
  • தில்லியின் மக்கள்தொகை அடர்த்தி – 11,300 / சது.கி.மீ.

வீட்டு வசதிகள்:

  • அதீத மக்கள் தொகையால் நகர்புறங்களில் வீடுகள் தட்டுப்பாடு. குடிசைப்பகுதிகள்: ரியல் எஸ்டேட் விலை உயர்வு, வீடுகள் பற்றாக்குறையால் குடிசைப்பகுதி அதிகரிப்பு

வேலைவாய்ப்பின்மை:

  • NSSO அறிக்கையின்படி, நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை கிராமப்புறங்களை விட 3.4% கூடுதல்.

போக்குவரத்து:

  • குறுகிய சாலைகள், அதிக வாகனங்கள், வளர்ச்சி அடையாத போக்குவரத்து வசதிகளால் போக்குவரத்து இடையூறு.

நீர் வழங்கல்:

  • நகர்புறங்களிலுக்கு தேவையான நீர் வழங்குதல் குறைந்து, பிற பகுதிகளை சாரும் நிலை.

கழிவுநீர்:

  • பருவமழையின் போது, கழிவுநீர் மழைநீருடன் கலந்து நகர்ப்புற வெள்ளம் ஏற்படல்.

திடக்கழிவு மேலாண்மை:

  • அதிகமான குப்பைகள் உருவாகி, அதை சிதைக்க வழியற்று இருத்தல்.
  • சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கும்.

நகர்ப்புற குற்றங்கள்:

  • கிராமங்களை விட நகர்ப்புறங்களில் குற்ற விகிதம் அதிகம்,
  • வேலையின்மை, தீவிர கண்காணிப்பு முறையின்மையே காரணம்.

மாசுபாடு:

  • தொழிற்சாலை, வாகன பெருக்கத்தால் மாசு பெருகுதல்.
  • சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் அளவு அதிகரித்தல்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!