நகர் வன திட்டம் பற்றி சிறு குறிப்பு எழுதுக 

  • நகர் வன (நகர்ப்புற காடுகள்) திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 நகர்ப்புற காடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள வார்ஜே நகர்ப்புற காடுகள் இந்த திட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாக கருதப்படுகிறது.
  • இத்திட்டம் வனத்துறை, நகராட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் இடையே மக்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் ஏற்று இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது.
  • இந்த நகர்ப்புற காடுகள் முதன்மையாக நகரத்தில் இருக்கும் வன நிலம் அல்லது உள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகிறது. 

நிதி:

  • இத்திட்டத்திற்கான நிதியானது CAMPA (காடு இழப்பு வளர்ப்பு நிதி (CAF) சட்டம், 2016) நிதி மூலம் செலுத்தப்படுகிறது.
  • காடு இழப்பு வளர்ப்பு நிதி சட்டம், ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக சேகரிக்கப்பட்ட நிதியை நிர்வகிப்பதற்கு இயற்றப்பட்டது.
  • இதற்கு முன்னர்  தற்காலிக இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தால் (CAMPA) நிர்வகிக்கப்பட்டது.
  • காடு இழப்பு வளர்ப்பு என்பது ஒவ்வொரு முறையும் வன நிலம் சுரங்கம் அல்லது தொழில் போன்ற வனமற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்த படும்போது, ​​வனமற்ற நிலத்திக்கு  சமமான பரப்பளவில் காடுகளை நடுவதற்கு காடுகளை அழித்த  நிறுவனம் அளிக்கிறது. அல்லது அத்தகைய நிலம் கிடைக்காத போது, ​​இரண்டு மடங்கு பரப்பளவு பாழடைந்த வன நிலம். அளிக்கப்படவேண்டும் 
  • காடு இழப்பு வளர்ப்பு நிதி பணத்தில் 90% மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும், 10 % மத்திய அரசால் தக்கவைக்கப்பட வேண்டும் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!