- நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
- நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- நாலடியார் நானூறு (400) வெண்பாக்களால் ஆனது.
- நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் நாலடியாரை அழைப்பர்.
- திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் ஆகும்.
- நாலும்(நாலடியார்) இரண்டும்(திருக்குறள்) சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் நாலடியார் திருக்குறளுக்கு இனணயாக வைத்துப் போற்றப்டுகிறது.
அழியாச் செல்வம் – நாலடியார்
பாடல்
வைப்புழிக் கோட்படா வாயத்தீயிற் கேடில்லை *
மிக்க சிறப்பின் அரசர் சென்றின் வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சை மற்று அல்ல பிற
பாடலின் பொருள்
- கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது.
- ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
- மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
- ஆதலால் ஒருவர தம் குழ்ந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.
சொல்லும் பொருளும்
- வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
- கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
- வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்
- விச்சை – கல்வி
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘கல்வி அழகே அழகு’ என்றும்;
“கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்றும் கூறும் நூல்.
(A) திருக்குறள்
(B) நான்மணிக்கடிகை
(C) திரிகடுகம்
(D) நாலடியார்
(E) விடை தெரியவில்லை
வேளாண்மை வேதம் எனப்படுவது
A) இனியவை நாற்பது
B) முதுமொழி
C) ஏலாதி
D நாலடியார்
‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் தொடரில் ‘நால்’ என்பது எந்த நூலைக் குறிக்கிறது?
(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) களவழி நாற்பது
(D) கார் நாற்பது
(E) விடை தெரியவில்லை
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
(A) இன்னா நாற்பது
(B) நான்மணிக்கடிகை
(C) நாலடியார்
(D) சிறுபஞ்சமூலம்
நாலடியார் நூலின் ஆசிரியர்_________ (2 Time)
(A) வள்ளுவர்.
(B) சுந்தரர்
(C) விளம்பி நாகனார்
(D) சமண முனிவர்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று?
(A) புறநானூறு
(B) நற்றிணை
(C) நாலடியார்
(D) பரிபாடல்
நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) இன்னா நாற்பது
(D) இனியவை நாற்பது
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————