- வியாசரின் மகாபாரதம் ஒரு பெண்ணுரிமைக் காப்பியம் ஆகும்.
- வியாசரின் மகாபாரதம் காப்பியத்தை தழுவியை தமிழில் சுப்பிரமணிய பாரதி எழுதியதே பாஞ்சாலி சபதம் ஆகும்.
- இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி பாரதியார் படைத்த படைப்பு பாஞ்சாலி சபதம் ஆகும்.
- பாஞ்சாலி சபதம் சிந்து என்னும் பா வகையால் எளிய தமிழ் நடையில் ஆக்கப்பட்ட நூலாகும்.
- பாஞ்சாலி சபதம் (இரு) 2 பாகங்கள் கொண்டது.
- பாஞ்சாலி சபதம் (ஐந்து) 5 சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
- பாஞ்சாலி சபதம் நூலில் உள்ள (ஐந்து) 5 சருக்கங்கள்
- சூழ்ச்சிச் சருக்கம்
- சூதாட்டச் சருக்கம்
- அடிமைச் சருக்கம்
- துகிலுரிதல் சருக்கம்
- சபத சருக்கம்
- பாஞ்சாலி சபதம், இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது.
முந்தைய ஆண்டு வினாக்கள்
பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
(A) பாஞ்சாலி சபதம்
(B) இராவணகாவியம்
(C) இயேசுகாவியம்
(D) கண்ணன் பாட்டு
(E) விடை தெரியவில்லை
வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
(A) பாகவத புராணம்
(B) பாஞ்சாலி சபதம்
(C) கண்ணன் பாட்டு
(D) கம்பராமாயணம்
(E) விடை தெரியவில்லை
பாரதிக்கு ‘மகாகவி’ என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
(A) வ.ரா
(B) உ.வே.சா
(C) கி.ஆ.பெ.வி
(D). லா. ச. ரா
வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
(A) பெரியபுராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) பாஞ்சாலிசபதம்
(D) ஞானரதம்
“பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(A) பாஞ்சாலி சபதம்
(B) மகாபாரதம்.
(C) இராமாயணம்
(D) பகவத் கீதை
‘பாஞ்சாலி சபதம்’ -எப்பாவகையைச் சார்ந்தது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) சிந்து
(D) கலிப்பா
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
(A) மூன்று பாகங்கள் 4 சருக்கங்கள் 400 பாடல்கள்
(B) இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்
(C) இரண்டு பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாக்கள்
(D) நான்கு பாகங்கள் 5 சருக்கங்கள் 415 பாக்கள்
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
(A) விருத்தமும் சிந்துவும்
(B) விருத்தமும் ஆசிரியமும்
(C) ஆசிரியமும் வெண்பாவும்
(D) வெண்பாவும் சிந்துவும்
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
(A) சோலை
(B) பாலைவனம்
(C) வயல்
(D) காடு
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபதத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
(A) 92 படலங்கள், 5027 பாடல்கள்
(B) 12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
(C) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
(D) 10 சருக்கங்கள், 894 பாடல்கள்
பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?
(A) 401
(B) 405
(C) 410
(D) 412
மடப்பிடி யார்?
(A) சீதை
(B) பாஞ்சாலி
(C) மாதவி
(D) கண்ணகி
‘கொம்பினை யொத்த மடப்பிடி’ – யார்?
(A) சீதை
(B) பாஞ்சாலி
(C) துச்சலை
(D) மந்தாரை
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————