பீமாராவ் அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956)

Contents show

அம்பேத்கரின் பொன்மொழி

நான் வணங்கும் தெய்வங்கள் 3 (மூன்று).

  1. முதல் தெய்வம் அறிவு.
  2. இரண்டாவது தெய்வம் சுயமரியாதை.
  3. மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.

-அம்பேத்கர்

என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்

-அம்பேத்கர்

அம்பேத்கர் எழுதிய ஆய்வு கட்டுரைகள்

  • பண்டைய கால இந்திய வணிகம் (1915)
  • இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் (1915)
  • இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்
  • ரூபாய் பற்றிய பிரச்சனை (1923)

பாரத ரத்னா விருது

  • அம்பேத்கர், 6 டிசம்பர் 1956ல் காலமானார்.
  • அம்பேத்கருடைய மறைவிற்குப் பின், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் உருவாக்கம்

  • ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை 
  • சமாஜ் சமத்துவ சங்கம் 
  • சுதந்திரத் தொழிலாளர் கட்சி 
  • ஒடுக்கப்பட்ட பாரதம் (இதழ்)
  • புத்தரும் அவரின் தம்மதமும் (புத்தகம்)

பீமாராவ் சக்பால் அம்பேத்கர்

  • அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் கிடைக்கும்போது தான் இந்தியா முழுமையான விடுதலை பெற்ற நாடாக இருக்க முடியும் என்று கருதி உழைத்த தலைவர் அம்பேத்கர்
  • விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர

அம்பேத்கரின் பன்முக ஆற்றல் 

  • பொருளியல் அறிஞர் 
  • பகுத்தறிவுச் சிந்தனையாளர் 
  • சிறந்த எழுத்தாளர் 
  • அரசியல் தத்துவமேதை 
  • சமூகச் சீர்திருத்தவாதி சிறந்த பேச்சாளர்

அம்பேத்கர் பிறப்பு

  • அம்பேத்கர் 1891 ஏப்ரல் 14ல் பிறந்தார்.
  • 6 டிசம்பர் 1956ல் அம்பேத்கர் காலமானார்.
  • அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பால், தாய் பீமாபாய்
  • அம்பேத்கர் (பதினான்காவது) 14வது குழந்தையாகப் பிறந்தார்.
  • அம்பேத்கர் பிறந்த ஊர் அம்ப வாதே. இரத்தின கிரி மாவட்டம், மகாராட்டிரா மாநிலம்.
  • அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தொடக்க நிலை கல்வி

  • அம்பேத்கர் தனது கல்வியை சதாராவில் உள்ள பள்ளியில் தொடங்கினார்.
  • ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் என்பதால் அம்பேத்கர் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார்.
  • அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கிய ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர்.

பெயர் மாற்றம்

  • ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர் மீதான பற்றால் பீமாராவ் சக்பால் அம்பேத்கர் என்னும் தனது பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

மும்பைக்கு குடிபெயர்வு 1904

  • அம்பேத்காருடைய குடும்பம் 1904 ஆம் ஆண்டு மும்பைக்குக் குடிபெயர்ந்தது.
  • அம்பேத்கர் 1904 ஆம் ஆண்டு மும்பை எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் தொடர்ந்தார்.
  • அம்பேத்கர் தனது பள்ளிப்படிப்பை 1907 ஆம் ஆண்டு முடித்தார்.

பரோடா மன்னரின் கல்வி உதவி

  • அம்பேத்கர் மும்பை பல்கலைக்கழகத்தில் பரோடா மன்னர் சாயாஜியின் கல்வி உதவியால் படித்தார்.
  • அம்பேத்கர் 1912 ஆம் ஆண்டு தனது இளங்கலைப் பட்டத்தை மும்பைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
  • அம்பேத்கர் சிறிது காலம் உயர் அலுவலராக பரோடா மன்னர் சாயாஜியின் அரண்மனையில் பணியாற்றினார்.

கொலம்பியா பல்கலைக்கழக வாழ்க்கை

பட்டப் படிப்பு

  • அம்பேத்கர் உயர்கல்வி கற்க பரோடா மன்னர் சாயாஜியின் கல்வி உதவியுடன் அமெரிக்காவின் கொலம்பியா சென்றார்.
  • அம்பேத்கர் பட்ட படிப்பை அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்றார்.

அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்ட படிப்பு பட்டங்கள்

  • பொருளாதாரம் 
  • தத்துவம்
  • சமூகவியல் அரசியல்

முதுகலைப் பட்டம் ஆய்வுக் கட்டுரைகள்

  • 1915ல் பண்டைய கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்
  • அம்பேத்கர்.
  • இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார் அம்பேத்கர்.
  • இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் ஆய்வுக் கட்டுரையை சிறுபுத்தகமாக வெளியிட்டார் அம்பேத்கர்.
  • அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

முனைவர் பட்டம்

  • இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்ற அம்பேத்கரின் ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

இலண்டன் பயணம்

  • அம்பேத்கர் தனது பொருளாதாரப் படிப்பிற்காக 1920 ஆம் ஆண்டு இலண்டன் சென்றார்.
  • அம்பேத்கர் தனது பெயரை இலண்டன் நூலகங்களில் பதிவு செய்துகொண்டார்
  • இலண்டனில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக நுழைந்து மூடும் போது கடைசி ஆளாக வெளியேறுவார்.
  • அயராத உழைப்பின் பயனாக முதுநிலை அறிவியல் பட்டத்தை 1921 ஆம் ஆண்டு பெற்றார்.
  • இலண்டனில் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராயச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.
  • இலண்டனில் பட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டத்தை 1923 ஆம் ஆண்டு பெற்றார்.

இந்தியா திரும்பிய பின் சமூகப்பணிகள்

  • ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை 1924 ஆம் ஆண்டு அம்பேத்கர் நிறுவினார்.
  • ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார் அம்பேத்கர்

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர்

  • 1927ல் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை அம்பேத்கர் துவங்கினார்.
  • சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் சமாஜ் சமத்துவ சங்கம் என்னும் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார்.
  • அம்பேத்கர் 1930 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

முதலாவது வட்ட வட்டமேசை மாநாடு அம்பேத்கர் – இரட்டைமலை சீனிவாசன்

  • இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்கலாமா என்பதை முடிவு செய்ய நவம்பர் மாதம் 1930 ஆம் ஆண்டு (முதலாவது) 1வது வட்ட மேசை மாநாட்டு இங்கிலாந்தில் நடைபெற்றது.
  • (முதலாவது) 1வது வட்ட மேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக சென்றவர் அம்பேத்கர்.
  • (முதலாவது) 1வது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கருடன் தமிழகத்தை சேர்ந்த இராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் கலந்து கொண்டார்.
  • “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று 1930 ஆம் ஆண்டு இலண்டன் (முதலாவது) 1வது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் அம்பேத்கர் கூறினார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டு -இரட்டை வாக்குரிமை

  • ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று (இரண்டாவது) 2வது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
  • (இரண்டாவது) 2வது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தியதன் விளைவாக இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • இரட்டை வாக்குரிமை முறை ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு

பூனா ஒப்பந்தம் காந்தி – அம்பேத்கர்

  • ஆனால், காந்தியடிகள் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டதை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • காந்தியடிகளின் உண்ணாவிரதத்தின் விளைவாக காந்தியடிகளும் அம்பேத்கரும் 1931
  • செப்டம்பர் 24ல் பூனா ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  • பூனா ஒப்பந்தத்தின்படி ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித் தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

சுதந்திரத் தொழிலாளர் கட்சி

  • மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் 1935 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
  • 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
  • ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் அம்பேத்கர் தேர்தலில் போட்டியிட விரும்பினார்.
  • சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கிய அம்பேத்கர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்கள் (பதினைந்து) 15 இடங்களில் வெற்றி பெற்றனர்.

அரசியல் அமைப்பில் அம்பேத்கரின் பங்கு

  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் (பதினைந்தாம்) நாள் இந்தியா விடுதலை பெற்றது.
  • அம்பேத்கர், ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத அரசியல் நிர்ணய மன்றம். 1947 ஆகஸ்ட் 29 ஆம் நாள் தீர்மானம் இயற்றியது.
  • அரசியல் நிர்ணய மன்ற தீர்மானத்தின்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் (Drafting committee) அம்பேத்கர் உட்பட மொத்தம் (ஏழு) 7 பேர் இடம் பெற்றனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றவர்கள்

  • கோபால் சாமி
  • அல்லாடி கிருஷ்ண மூர்த்தி
  • டி. பி. கை தான்
  • ஜே. எம். முன்ஷி
  • மாதவ ராவ்
  • சையது முகமது சாதுல்லா
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21ல் சமர்பித்தது.
  • வரலாற்று ஆசிரியர்களால் மிகச்சிறந்த சமூக ஆவணம் என இந்திய அரசியல் அமைப்பு சட்டம் போற்றப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களில் எடுத்தாளப்பட்டுள்ள நாடுகள்

  • இங்கிலாந்து
  • ஐக்கிய அமெரிக்கா
  • அயர்லாந்து
  • ஆஸ்திரேலியா
  • தென் ஆப்பிரிக்கா
  • கனடா
  • ஜெர்மனி
  • சோவியத் யூனியன்

புத்த சமயம் மீது பற்று

  • அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டவர்.
  • அம்பேத்கர் இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
  • உலகப் புத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார்.
  • அம்பேத்கர் நாக்பூரில் இணைத்துக்கொண்டார். புத்த சமயத்தில் 1956 அக்டோபர் 1460 3601602601
  • புத்தரும் அவரின் தம்மதமும் என்னும் புத்தகத்தை அம்பேத்கர் எழுதினார்.
  • அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மதமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957ல் வெளியானது.

அம்பேத்கரின் கல்வி வரலாறு

  • தொடக்க கல்வி – சதாரா
  • உயர்நிலை கல்வி –  மும்பை எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளி -1904
  • உயர்நிலை கல்வி முடித்த ஆண்டு – 1904
  • இளங்கலைப் பட்டம் – மும்பைப் பல்கலைக்கழகம் 1912
  • கூடுதல் பட்ட படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம்
  • முதுகலைப் பட்டம் – கொலம்பியா பல்கலைக்கழகம் 1915
  • பொருளாதாரப் படிப்பு – இலண்டன் 1920
  • முதுநிலை அறிவியல் பட்டம் – இலண்டன் – 1921
  • பாரிஸ்டர் பட்டம் – 1923

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!