பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது
- பாலின உறவுகளும், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை புரிந்து கொள்வதும் ஆகும். மேலும், இது தொடர்பான அறிவைப் பெறுதல்.
- தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையையும், சுய மதிப்பையும் வளர்த்தல்.
பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் பங்கு:
- சமூக விழிப்புணர்வு
- சுயநம்பிக்கை, ஆளுமை மேம்பாடு
- பாலின சமத்துவம்
- குடும்ப நிலை உயர்வு
- கல்வி சமத்துவம்
- பெண்கள் தொழில் முனைதல்
- வீட்டு சேமிப்பு, கடன் பெறும் வசதி
- சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான சூழல்
கல்வியின் பயன்பாடு
- தனிப்பட்ட பெண், அவளது குடும்ப நிலையில்:
- முக்கிய முடிவெடுத்தலில் பங்கெடுப்பு
- குடும்ப அளவை நிர்ணயித்தல்
- தன் வருமானத்தை வேண்டிய வழியில் செலவிடும் சுதந்திரம்
- தன் வேலையில் நம்பிக்கையும், பெருமையும் ஏற்படுதல்
- சுயமதிப்பும், தன்னம்பிக்கையும் வளரச் செய்தல்
- வன்முறையைத் தடுக்கும் திறன்
சமுக/நிறுவன அளவில்:
- அதிகாரமளித்தல் மகளிர் குழுக்கள்/நிறுவனங்களின் பங்கு.
- பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.
- பெண் தலைவர்களின் எண்ணிக்கை கிராம, மாவட்ட, பிராந்திய, தேசிய நிலைகளில் அதிகரித்தல்
- சட்ட உரிமைகளை பயன்படுத்த பெண்ணுக்கு அதிகாரமளித்தல்
தேசிய அளவில்:
- சமூக, அரசியல் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு
- தேசிய மேம்பாட்டு திட்டத்தில் பெண்களை ஒருங்கிணைத்தல்
- பெண்களுக்கான அமைப்புகளின் இருப்பு