பொதுநிதி என்பதனை வரையறு. பொதுநித்துக்கும் தனியார் நிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக

பொதுநிதி 

  • பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும். 
  • இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது 

பொதுநிதி மற்றும் தனியார் நிதி 

  • பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி படிக்கிறது. 
  • பொது நிதிமற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றின் அளவு, நோக்கம், விளைவு, தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.

ஒற்றுமைகள்

பகுத்தறியும் தன்மை 

  • பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாக கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடனுக்கான வரையறை 

  • இரண்டுக்குமான கடன்கள் வரையரைக் கொண்டுள்ளது. தனது வருவாய்க்கு அப்பால் அரசும் செல்வதில்லை. அரசின் பற்றாக்குறை வரவு செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.

வளங்களின் பயன்பாடு

  • தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகிறது.

நிர்வாகம் 

  • நிர்வாகத் திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது. செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நட்டங்கள் ஏற்படும்.

வேற்றுமைகள்

வருமான மற்றும் செலவு சரி கட்டல்

  • அரசு செலவினை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது. 
  • தனிநபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக் கொள்வார்கள். 

கடன் 

  • அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன்களை பெறலாம். 
  • மேலும் அரசானது, பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம். ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனைப்பெறமுடியாது.

பணம் அச்சடிக்கும் உரிமை 

  • அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். இது பணத்தை உருவாக்குதல்,பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தனியார் பணத்தை உருவாக்க இயலாது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!