மறைமலையடிகள்

  • மறைமலையடிகள் காலம் 1876-1950 மறைமலையடிகளின் இயற்பெயர் சுவாமி வேதாசலம்.
  • ‘சுவாமி வேதாசலம்’ எனும் தன் பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.
  • மறைமலையடிகள் பரிதிமாற்கலைஞருடனான நட்பின் காரணமாக ‘தனித்தமிழ்’ மீதான பற்று மிகுதியாக்கியது.
  • பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார் மறைமலையடிகள்.
  • மறைமலையடிகள் இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்தார்.

மறைமலையடிகள் சிறந்த இதழாளராகத் திகழ நடத்திய இதழ்கள்

  • ஞானசாகரம் (1902)
  • Oriental Mystic Myna (1908)
  • Ocean Of Wisdom (1935)

மறைமலையடிகள் எழுதியுள்ள நூல்கள்

  • சாகுந்தல நாடகம்
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை
  • முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

கல்லூரி நேர்காணலில் குற்றியலுகரம் -பரிதிமாற்கலைஞர் – மறைமலையடிகள்

பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்

  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் மறைமலையடிகள்.
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர்.
  • குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள் என்று பரிதிமாற்கலைஞர் கேட்டார்.
  • அஃது எனக்குத் தெரியாது என்று மறைமலையடிகள் பதிலளித்தார்.
  • ‘மறைமலையடிகளே நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர்.
  • தெரியாது என்று சொள்ளவரை, எப்படித் தேர்வு செய்யலாம் ? என்று பிறர் கேட்டபோது அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம்.
  • எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம்.
  • தெரியாது என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர்.
  • இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
(A) மதங்க சூளாமணி
(B) மத்தவிலாசம்
(C) சாகுந்தலம்
(D) மனோன்மணீயம்

‘ஞான சாகரம்’-இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
(A) பரிதிமாற்கலைஞர்
(B) மறைமலையடிகள்
(C) இரா.பி. சேதுப்பிள்ளை
(D) திரு வி க

பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(A) சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
(B) திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
(C) சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
(D) மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
‘மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
(A) க.ப.சந்தோஷம்
(B) மறைமலை அடிகள்
(C) வ உ சி
(D) செல்வக் கேசவராய முதலியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!