மாநகராட்சி
- நகராட்சி அமைப்பில் மாநகராட்சி மிக உயர்ந்த வகையைச் சார்ந்ததாகும்.
- மாநாகராட்சி அதிகப்படியான அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ஏனைய வட்டார அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, அது விரிவான பணிகளையும், அதிக நிதித்தன்னாட்சியையும் அனுபவிக்கின்றது.
- மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சிறப்பு நகராட்சிச் சட்டங்களின் கீழ் மாநகராட்சிகள் பெரிய நகரங்களில் நிறுவப்படுகின்றன.
- நாடாளுமன்றத்தின் சட்டத்தினால் யூனியன் பிரதேசங்களின் மாநகராட்சிகள் அமைக்கப்படுகின்றன.
- சாதாரணமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கட்தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அமைக்கப்படுகின்றன.
- அவைகளுடைய ஆண்டு வருமானம் பொதுவாக ஒரு கோடியாகும். உதாராணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத், பெங்களூர் மாநகராட்சிகள்
மாநகராட்சி பணிகள்
- கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போன்று நகராட்சி அமைப்புகள் சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்பட வேண்டி உள்ளன.
- பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பினை அவை பெற்றுள்ளன.
- பன்னிரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 18 அம்சங்கள் குறித்து பணிகளை மேற்கொள்வதோடு, செயல் திட்டங்களையும் அவை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
- நகர திட்டமிடலுடன் ஊரகத் திட்டத்தையும் தீட்டுதல்.
- கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் நிலத்தைப் பயன்படுத்துதல் அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துதல்.
- பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் திட்டமிடுதல்.
- சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் பராமரித்தல்.
- குடிநீர் விநியோகம் செய்தல்.
- பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல்.
- தீயணைப்புப் படை பணிகள்
- ஊரகக்காடு மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல்.
- ஊனமுற்றோர் மற்றும் சிந்தை மந்தமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய, சமுதாயத்தின் நலிவுற்ற வகுப்புனரின் நலன்கள் பாதுகாத்தல்.
- சேரி முன்னேற்றம் செய்தல்.
- ஊரக வறுமை நீக்கம் செய்தல்.
- கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
- பூங்காக்கள், தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
- இடுகாடு மற்றும் சுடுகாடு, மைதானங்கள் பராமரித்தல்.
- கால்நடைக் குட்டைகளை அமைத்தல் மற்றும் மிருக வதையைத் தடை செய்தல்.
- பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைத் திரட்டல்.
- பேருந்து நிறுத்துமிடங்கள், கழிவறை, சாலை விளக்கு போன்ற பொது வசதிகளைச் செய்து கொடுத்தல்.
- இறைச்சித் தொட்டிகள், தோல் பதனிடல் ஆகியவற்றை ஒழுங்குமுறை படுத்துதல்.
மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள்
- மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் (அ) வரி விதிப்பு மூலம் பெறப்படும் வருவாய் (ஆ) வரிவிதிப்பில்லாத வகையிலிருந்து வரும் வருமானம் என இரு தன்மைகளை உடையனவாக உள்ளன.
- கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் மீதான வரி.
- வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மீதான வரி.
- கொட்டகை (நாடகம், சினிமா) வரி.
- நகரத்திற்குள் மக்களுக்குக் காட்சியளிக்கும் பொருட்டு செயல்படும் விளம்பரங்கள் மீதான வரி.
- தொழில், வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீதான வரி.
- கேளிக்கை வரி.
- மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி.
- நில மதிப்புகள் உயர்வதின் மீது விதிக்கப்படும் மேம்பாட்டு வரி.
- சந்தை வரி அல்லது பாதை வரி.