மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- ஷரத்து 315-இன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருத்தல் வேண்டும்.
ஷரத்து 316 மற்றும் ஷரத்து 317
- மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம், பதவிக்காலம், பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கம் போன்றவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வரையறை செய்யப்பட்டுள்ள ஷரத்து 316 மற்றும் 317-இன்படியே தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனம்
- மாநில பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அம்மாநில ஆளுநர் நியமனம் செய்கிறார்.
பதவி விலகல்
- இராஜினாமா கடிதம் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.
- ஆனால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது.
எண்ணிக்கை மற்றும் பணிநிலை
- ஷரத்து 318 – ன் படி மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் கூட்டுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையையும் உறுப்பினர்களின் பணி நிலைமையையும் குடியரசுத்தலைவர் முடிவு செய்வார்.
- மாநில பணியாளர் தேர்வாணையத்தைப் பொருத்த வரையில் ஆளுநர் முடிவு செய்வார்.
- ஆனால் உறுப்பினர்களின் பணிநிலையை அவர்கள் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மாற்றம் செய்யக்கூடாது.
ஷரத்து 319
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் தனது பணிமூப்பிற்குப் பிறகு வேறு மத்திய – மாநில அரசுப் பணிகளில் நியமிக்கப்பட தகுதியற்றவர்களாவர்.
- அதேசமயம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் வேறு மாநில அரசுப் பணியர் தேர்வாணையத் தலைவர் அல்லது மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் / உறுப்பினராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்.
- மத்திய, அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏதாவதொரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ அல்லது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ நியமிக்கப்படத் தகுதியுள்ளவராவார்.
- மாநிலத் தேர்வாணைய உறுப்பினர்கள் பணிக்காலத்திற்குப் பிறகு சொந்த / பிற மாநில தேர்வாணையத் தலைவராகவோ, மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ, உறுப்பினராகவோ நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவராவர்.
தேர்வாணையத்தின் பணிகள்
- ஷரத்து 320 மத்திய – மாநில பணியாளர் தேர்வாணையங்களின்
பணிகளை வரையறுக்கிறது. - மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
- மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையமானது மாநில அரசுகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் கேட்டுக் கொண்டால் கூட்டுப்பணி நியமனத்திற்குத் தேவையான செயல்முறைத் திட்டத்தினை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வகுத்தளிக்க வேண்டும்.
- மேலும் தேர்வாணையம் ஆலோசனை செய்ய வேண்டிய தருணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் பணிகள் ஒதுக்கீடு
- ஷரத்து 321-இன்படி மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நாடாளுமன்றமும் மாநிலப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சட்டமன்றமும் கூடுதல் பணிகளை ஒதுக்கும் அதிகாரம் கொண்டவையாகும்.
நிதி
- ஷரத்து 322-இல் மத்திய மாநில தேர்வாணையத்திற்கு செலவுகள் முறையே மத்தியத் தொகுப்பு நிதி மற்றும் மாநில தொகுப்பு நிதியிலிருந்து பெறப்பட வேண்டும். இவை வாக்கெடுப்பிற்கு உட்படாது.
வருடாந்திர அறிக்கை
- ஷரத்து 323-இன்படி மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தனது வருடாந்திர அறிக்கையை குடியரசுத்தலைவரிடம் சமர்பிக்கும். அதனை அவர் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்.
- மாநிலப் பணியாளர் தேர்வாணையம் தனது ஆய்வறிக்கையை ஆளுநரிடம் சமர்பிக்கும். அதனை அவர் சட்டமன்றத்திடம் சமர்பிப்பார்.
- கூட்டு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர் அனைவரிடமும் ஆய்வறிக்கையை சமர்பிக்கும். அவர்கள் தங்களின் மாநில சட்ட சபையில் சமர்பிப்பர்.