மாநிலத்தின் உயர் நீதிமன்றம்
- மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது.
- அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.
- எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றமும் இருக்கலாம்.
- மாநில உயர் நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், குடியரசுத் தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவுமா இருப்பதில்லை.
- குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
தகுதிகள்
- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- உயர் நீதிமன்ற நீதிபதி 62 வயது வரை அப்பதவியில் இருப்பார். உயர் நீதிமன்ற நீதிபதி நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது போன்று நீக்கப்படலாம்.
அதிகாரம் மற்றும் பணிகள்
நீதிப்பேராணை அதிகாரம்
- அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர் நீதிமன்றம் ஆட்கொணர்வு நீதிப்பேராணை, மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப்பேராணை ஆகியவற்றை பிறப்பிக்கின்றன.
கண்காணிக்கும் அதிகாரம்
- ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்களாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
- சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் திருத்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.
- உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
பதிவுறு நீதிமன்றம்
- உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதார சான்றாக உள்ள பதிவுறு நீதிமன்றமாக விளங்குகிறது.
- நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும். மாவட்ட நீதிபதிகள் ஆளுநரால்நியமனம் செய்யப்படுகின்றனர்.
- மேலே தெரிவித்த அதிகாரங்களை தனது எல்லைக்குள் செயல்படுத்தும் போது நீதிமன்றம் முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளது.
- அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.