மின்னழுத்தம் மற்றும் ஓம் விதி பற்றி சிறு குறிப்பு வரைக.

மின்னழுத்தம்

  • ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.

வோல்ட்

  • மின்னழுத்தம் மற்றும் வேறுபாட்டின் அலகு வோல்ட் (V) மின்னழுத்த ஒரு கூலும் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச் செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.

1 வோல்ட் = 1 ஜூல் / 1 கூலும்

ஓம் விதி

  • ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர். மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
  • இவ்விதியின்படி மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்சுகவில் அமையும்.

I ∝  V

எனவே,

I / V. = மாறிலி,

இந்த மாறிலி மதிப்பு  1 / R ஆகும்.

எனவே I = (1/R) V

V = IR

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!