மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள் பற்றி எழுதுக

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள்:

சமூக நீதி (ம) அதிகாரமளிப்பு அமைச்சகம்:

  1. முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டம், 1992:
  2. மத்திய துறைத்திட்டம்
  3. குறிக்கோள்: தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் முதியோர் இல்லங்கள் மேம்பாடு, இயன் முறை மருத்துவம் (பிசியோதெரபி) நிலையங்களை நிர்வாகித்தல்.
  4. ராஷ்டிரிய வயோசிரி யோஜனா, 2017:
  5. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவுதல் மற்றும் இலவச வாழ்க்கைத் துணைநல உபகரணங்கள் வழங்குதல்.

ஊரக மேம்பாட்டு அமைச்சகம்:

  1. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்:
  2. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
  3. 60 முதல் 79 வயதுள்ள முதியோருக்கு மாதம் ரூ.200 மத்திய அரசு உதவி.
  4. 80 வயதுக்கு மேல் உள்ளோருக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்:

  1. 60 வயதிற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மூத்த குடிமக்கள் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS).

நிதி அமைச்சகம்:

  1. வரிஷ்ட ஓய்வூதிய காப்பீட்டு திட்டம்:
    1. மூத்த குடிமக்களுக்கு முதலீட்டுத் தொகையில் 9% வட்டி வீதத்தில் (ஆண்டிற்கு) உறுதி செய்யப்பட்ட வருவாய் அளித்தல்.
    2. LIC யால் செயல்படுத்தப்படுகிறது.
  2. பிரதம மந்திரி வய வந்தன யோஜனா:
  1. 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பத்து வருடங்களுக்கு 8% வட்டி வீதத்தில் (ஆண்டிற்கு) உறுதி செய்யப்பட்ட வருவாய் அளித்தல்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!