மைய வங்கியின் தோற்ற வரலாறு

  • 1656 நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியது தான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி.
  • இம்மைய வங்கி 1897 ஆம் ஆண்டு பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றது.
  • ஆனால், வங்கிக் கலையின் அடிப்படையில் 1864-ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும் (Bank of England)
  • 1920-ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் (International Finance Conference) எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954 -ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் மைய வங்கி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
    • தென்ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி (1921),
    • சீன மைய வங்கி (1928),
    • நியூசிலாந்து ரிசர்வ் வங்கி (1934),
    • இந்திய ரிசர்வ் வங்கி (1935),
    • சிலோன் மைய வங்கி (1950) மற்றும்
    • இஸ்ரேல் மைய வங்கி(1954).

மைய வங்கி

  • இங்கிலாந்து நாட்டின் மைய வங்கியான இங்கிலாந்து வங்கி 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • பிரான்சு நாட்டின் மைய வங்கி பாங்க் ஆப் பிரான்சு கி.பி. 1800 ல் நிறுவப்பட்டது.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் தனது மைய வங்கியான கூட்டு ரிசர்வ் முறை 1914 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • முதல் உலகப் போருக்குப்பின் 1929 ஆம் ஆண்டு புருசெல்சில் நடைபெற்ற மாநாட்டில் சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் ஒவ்வொரு நாட்டிலும் மையவங்கி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி பாங்க் ஆஃப் இந்துஸ்தான் (1770).
  • இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்ட முதல் வங்கி 1881 இல் ஔத் வணிக வங்கி ஆகும்.
  • முதலாவது முழுமையான இந்தியர்களால் 1894 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும்.

மைய வங்கியின் பணிகள்

காகிதப்பண வெளியீடு:

  • இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப் பணத்தைத் தவிர அனைத்து வகையான காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.

வங்கிகளின் வங்கி:

  • இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும்.
  • இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
  • 1999-ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை (Foreign Exchange Management Act-FEMA) சட்டத்தின்படி இது அந்நிய செலாவணி மேலாண்மையும் நிர்வகிப்பையும் மேற்கொள்கிறது,

செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதில் நெறியாளராகவும், மேலாளராகவும் செயல்படுகிறது

  • 2007 ஆம் ஆண்டு செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டம் (The payment and Settlement System Act.2007 – PSS Act) இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

வங்கி குறைதீர்ப்பாய திட்டம்:

  • இந்திய ரிசர்வ் வங்கி 1995ல் வங்கி குறைதீர்ப்பாயத்தினை (Banking Ombudsman) அறிமுகப்படுத்தியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!