லென்சுகள் பற்றி குறிப்பெழுதி அதன் வகைகளை பட்டியலிடுக.

லென்சுகள்

  • இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் ‘லென்சு’ எனப்படும்.
  • இப்பரப்புகள் இரண்டும் கோளகப் பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப் பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும். பொதுவாக லென்சுகள்
      1. குவிலென்சு
      2. குழிலென்சு என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

குவிலென்சு அல்லது இருபுறக் குவிலென்சு:

  • இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும். இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. எனவே இவை ‘குவிக்கும் லென்சுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

குழிலென்சு அல்லது இருபுறக் குழிலென்சு:

  • இவை இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
  • இவற்றின் வழியாகச் செல்லும் இணையான கோளகப் பரப்புகளைக் கொண்டது, இவை மையத்தில் ஒளிக்கற்றைகள் விரிந்து செல்கின்றன. எனவே இவை விரிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன.

குவிலென்சின் பயன்பாடுகள்

  • ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
  • உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.
  • நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் (Slide Projector) போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.
  • தூரப்பார்வை என்ற பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யப் பயன்படுகின்றன.

குழிலென்சின் பயன்பாடுகள்

  • கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.
  • வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துளைகளில் பொருத்தப்படுகின்றன.
  • கிட்டப்பார்வை என்னும் பார்வைக்குறைப்பாட்டைச் சரி செய்யப் பயன்படுகிறன.

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!