வகுப்பு வாதம்
- மொழி, இனம், வகுப்பு, சாதி, மதம் அடிப்படையில் இரண்டு அல்லது அதிகமான சமுதாயப் பிரிவுகளாகப் பிரிவது வகுப்புவாதமாகும்.
- ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்தோடு விரோதமாக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதற்கு வகுப்பு வாத கொள்கைகள் வழிகோலுகின்றன.
வகுப்பு வாதத்திற்கான தீர்வுகள்
பொருளாதார தீர்வுகள்
- வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- சிறுபான்மையினரிடையே நிலவும் கல்வி மற்றும் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை சரி செய்தல்.
- சிறுபான்மையினர் மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்
அரசியல் ரீதியிலான தீர்வுகள்
- வகுப்புவாத மோதல்கள் அடிக்கடி நிகழும் இடங்களை அடையாளம் காணுதல்
- மதரீதியான பண்டிகைகளின் போது வகுப்புவாத பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகளை காவலர்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்தல். (
சமூகத் தீர்வுகள்
- புத்தகங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் மக்களுக்கு (குறிப்பாக பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பு வாதத்தின் தீமைகளை உணர்ச் செய்தல்.
- ஊடகங்கள் மூலம் வகுப்பு வாதத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
அரசியல் சமூகமயமாக்குதல்
- அரசியல் தலைவர்கள் மக்களிடையே மதச்சார்பற்ற சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்.
தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் பரிந்துரைகள்
- அனைத்து மதத்தினரும் இணைந்து பண்டிகைகளை கொண்டாடுதல்
- சமூக விரோத சக்திகள் வகுப்புவாத கலவரங்களில் ஈடுபடுவதை தடுக்க உள்ளுரளவில் மக்களிடையே அமைதி மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவித்தல்.
- மத பழக்கவழக்கங்கள் சடங்குகள் மற்றும் மத நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல்.
வகுப்பு வாதத்தை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
- 2005-ல் அமைக்கப்பட்ட சச்சார் குழு குறைத்தீர்க்கும் வழிமுறையாக அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதை பரிந்துரைத்தது.
ரங்கநாத் மிஸ்ரா குழு
- சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைத்தல்.
- மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைக்கிறது.