வாயுக்களின் அடிப்படை விதிகள்
- வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை
- பாயில் விதி
- சார்லஸ் விதி
- அவகேட்ரோ விதி
பாயில் விதி
- மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P ∝ 1/V
- மாறா வெப்பநிலையில், மாறா நிறையுடைய நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் ஆகியவற்றின் பெருக்குத்தொகை மாறிலி எனவும் வரையறுக்கலாம்.
அதாவது PV = மாறிலி
சார்லஸ் விதி (பரும விதி)
- பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஜேக்கஸ் சார்லஸ் என்பவர் இவ்விதியினை நிறுவினார். இவ்விதியின் படி, மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
அதாவது V ∝ T
அல்லது
V / T = மாறிலி
அவகேட்ரோ விதி
- அவோகேட்ரோ விதியின் படி, மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
அதாவது V∝ n
அல்லது
V / n = மாறிலி
- ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவோகேட்ரோ எண் என வரையறுக்கப்படும். இதன் மதிப்பு 6.023 x 1023/மோல்.
Also Read
- Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள்
- Heat, Light and Sound / ஒளி,ஒலி மற்றும் வெப்பம்
- Electricity and Electronics / மின்னியல் மற்றும் மின்னணுவியல்
- Elements and Compounds / தனிமங்களும் சேர்மங்களும்
- Carbon / கார்பன்
- Nitrogen and their compounds / நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
- Fertilizer / உரங்கள்
- Pesticides / களைக்கொல்லி
- Insecticides / பூச்சிக்கொல்லி
- Blood and blood circulation / இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்கள்
- Endocrine system reproductive system / நாளமில்லா சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம்