Contents show
வேலூர் சிப்பாய் கலகம் (1806)
- வேலூர் சிப்பாய் கலகம் (1806) இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக கருதப்படுகிறது. இந்த கலகம் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் நடந்தது.
கிளர்ச்சிக்கான காரணங்கள்
- வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தபோது 1803ல் இராணுவ சீர்திருத்தங்ளை மேற்கொண்டார்.
- ஜான் கிரடாக்கினால் கொண்டு வரப்பட்ட பின்வரும் சீர்திருத்தங்களும் கலகத்திற்கு காரணமாக அமைந்தன.
- சிப்பாய்கள் தாடியினை மலிக்கவும், மீசையினை சுருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
- நெற்றியில் மத அடையாளங்கள் இடுவதும், கம்மல் அணிவதும் தடைசெய்யப்பட்டது.
- ஜூன் 1806ல் ஜெனரல் அக்னியூவால் கொண்டுவரப்பட்ட புதிய தலைப்பாகை கலகத்திற்கு உடனடி காரணமாக அமைந்தது.
- தோலினால் செய்யப்பட்ட இலட்சினையை அணிய இஸ்லாமிய மற்றும் இந்து சிப்பாய்கள் மறுத்தனர்.
- இக்கலகத்தை வழி நடத்தியவர் திப்பு சுல்தானின் மகன் ஜமாலுதீன் ஆவார்.
- அதிகாலை 2 மணிக்கு 10 ஜூலை 1806ல் கலகம் தொடங்கியது.
- தளபதி எல்லி, தளபதி பாப்ஹாக் உட்பட 13 ஐரோப்பிய அதிகாரிகளை முதல் மற்றும் 23 படையை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.
- சிப்பாய்கள் திப்பு சுல்தானின் மகன் பதே ஹைதரை அரசராக அறிவித்து புலிக்கொடியை ஏற்றினர்.
- ஆற்காட்டில் இருந்த கர்னல் கில்லஸ்பிக்கு தகவல் அனுப்பியபின் 23 வது படைப்பிரிவைச் சார்ந்த கேப்டன் ஸ்டீவன்சன்னை மேஜர் கூட்ஸ் அனுப்பினார்.
- கேப்டன் யாங், லெப்டினன்ட் உட்கவுஸ் மற்றும் கர்னல் கென்னடி ஆகியோருடன் கர்னல் கில்லஸ்பி வேலூரை நோக்கி நகர்ந்தனர்.
- விரைவில் கோட்டை கைப்பற்றப்பட்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. கில்லஸ்பியின் ஆணையினால் பல சிப்பாய்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
- கலகத்தின் முடிவில் 113 ஐரோப்பியர்கள் 350 சிப்பாய்கள் இறந்தனர்.
- திப்பு சுல்தானின் குடும்பம் கல்கத்தா கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.
- கர்னல் கில்லஸ்பியின் செயலுக்கு பரிசும் வழங்கப்பட்டது. ஜான்கிரடாக் அக்னியூ மற்றும் வில்லியம் பெண்டிங் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- கலகம் பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க் மற்றும் சங்கரிதுர்க் ஆகிய பகுதிகளிலும் எதிரொலித்தது.
- இராணுவ சீர்திருத்தங்களும் புதிய சீருடையும் நீக்கப்பட்டது.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்
- இந்திய சிப்பாய்களுக்கு சரியான தலைமை இல்லை
- கிளர்ச்சி சரியாக திட்டமிடப்படவில்லை
- பிரிட்டீசாரின் பிரித்தாளும் கொள்கை வேலை செய்தது.
- மக்கள் இக்கலகத்தில் ஈடுபடவில்லை
- சரியான நேரத்தில் உதவிக்கு மற்ற படைகள் ஏதும் வரவில்லை.