வைரஸ்:
- வைரஸ்கள் என்பவை உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற மிகச்சிறிய அகச்செல் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும்.
- உயிருள்ள செல்களுக்கு வெளியே, ஓர் உயிருள்ள உயிரினத்தின் பண்புகளை இவை பெற்றிருக்காது.
- வைரஸ்கள் உயிருள்ள செல்களுக்குள் நுழைந்து புதிய வைரஸ்களை உருவாக்க அச்செல்களைத் தூண்டுகின்றன.
மனித வைரஸ் நோய்கள்
நோய்கள் | நோய்க்காரணி | நோய்த் தொற்றும் பகுதி | பரவும் முறை
| அறிகுறிகள்
| |
1.
| சாதாரண சளி (தடிமல்) (Common Cold) | ரைனோ வைரஸ்கள் (Rhinoviruses)
| சுவாசப்பாதை
| நீர்த்திவலைகள்
| மூக்கடைப்பு மற்றும் கோழை வெளியேற்றம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி |
2.
| புட்டாளம்மை (Mumps) (பொன்னுக்கு வீங்கி)
| மம்ப்ஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus) | உமிழ்நீர்ச் சுரப்பி
| உமிழ்நீர் மற்றும் நீர்த் திவலைகள்
| மேலண்ண சுரப்பியல் (Parotid) வீக்கம் ஏற்படுதல்
|
3. | தட்டம்மை (Measles)
| ருபல்லா வைரஸ் (Rubella) (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus) Virus)
| தோல் மற்றும் சுவாசப்பாதை
| நீர்த்திவலைகள்
| கரகரப்பான, தொண்டை மூக்கு ஒழுகல், இருமல், காய்ச்சல் மற்றும் தோல் கழுத்து, காதுகளில் ஏற்படும் சிவப்பு நிறத் தடிப்புகள் |
4
| கல்லீரல் அழற்சி (Viral Hepatitis)
| ஹெப்பாடைட்டிஸ்-B வைரஸ்
| கல்லீரல்
| பெற்றோர் வழி, இரத்தப் பரிமாற்றம்
| கல்லீரல் சிதைவு, மஞ்சள் காமாலை, குமட்டல், மஞ்சள் கண்கள், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி |
5. | சின்னம்மை (Chicken pox)
| வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (Varicella Zoster virus) (டி.என்.ஏ. வைரஸ்)
| சுவாசப்பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம்
| நீர்த்திவலைகள் மற்றும் நேரடி தொடர்பு
| லேசான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் கொப்புளம் |
6.
| இளம்பிள்ளை வாதம் (Polio)
| போலியோ வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்)
| குடல், மூளை, தண்டுவடம்
| நீர்த் திவலைகள், வாய்வழி. மலத்தொற்று
| காய்ச்சல், தசை விறைப்பு மற்றும் வலுவிழத்தல்,பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறு |
7. | டெங்கு காய்ச்சல் (Dengue fever)
| டெங்கு வைரஸ் ஃபிளேவி வைரஸ் | தோல் மற்றும் ரத்தம்
| நோய்க் கடத்தியான ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள்
| திடீரன தோன்றும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி |
8. | சிக்குன்குன்யா (Chikun gunya)
| ஆல்ஃபா வைரஸ் (டோகா வைரஸ்) (Alphavirus Togavirus) | நரம்பு மண்டலம்
| நோய்க் கடத்தியான ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் (Aedes aegypti)
| காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் |