வீரை வெளியன் தித்தனார்
- வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
- தலைவி தினைப்புளம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பதை ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது போன்ற பாடலை வீரை வெளியன் தித்தனார் எழுதியுள்ளார்.
திணை – குறிஞ்சி
துறை – இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
பாடல் 188
பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டு
உயர் விசும்பின் வலனேர்பு வளைஇப், *
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர் * * *
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்து எறிவாளின்,
நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி. நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்?
பொன்னென மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப் பொலிந்த ஆயமொடு காண்தக *
இயலித் தழலை வாங்கியும் தட்டை ஒப்பியும், அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
* குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ? வாழிய, மழையே! *
– வீரை வெளியன் தித்தனார்
தலைவி, தினைப்புளம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பதை தோழி ‘உள்ளுறை‘, ‘இறைச்சி‘ வழியாக உரைக்கும் பாடல்
பாடலின் பொருள்
- தலைவனுக்குக குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வது போல சொலகிறாள்.
- “பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளும்படி உலாவுகிறாய். போர் முரசம் போல முழங்குகிறாய்.
- முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வாள் போல மின்னுகிறாய்.
- முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் வெற்று ஆராவாரம் செய்கிறாயா அல்லது மழைப் பொழிவாயா?
- பொன்னெண் மலர்ந்த வேங்கை மலரைக் கட்டி அணிந்து கொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம் காப்பாள்.
- தழலை, தட்டை ஆகிய கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு காப்பாள். *
- அவள் அசோக இலைகளால் தழையாடை அணிந்திருப்பாள். *
- குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் நீ மழை பொழிவாயா?”
குறிப்பு
- தலைவி தினைப்புளம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்பு. இது இறைச்சிப் பொருள்.
சொல்லும் பொருளும்
கொண்மூ – மேகம்
விசும்பு – வானம்
சமம் – போர்
அரவம் – ஆரவாரம்
ஆயம் – சுற்றம்
தழலை, தட்டை – பறவைகளை ஓட்டும் கருவிகள்
அகநானூற்று – வீரை வெளியன் தித்தனார் பாடலின் சுருக்கம்
பெருங்கடலில் நீர்முகக்கும் முகிலே சொல்நீ வான்வெளி இருளப் பரபரப்பாய் வரும் உலா பேர்க்கள முரசாய்ப் பொழுதுக்கும் இடிமுழக்கம் அறநெறியாளன் ஆட்சியில் காக்கும் போர்க்கள வீரர் வாள்போல் பொறிமின்னல் நாளும் இவையெல்லாம் சும்மா நடிப்பா? அல்லது ஆளை அலைக்கழிக்கும் மழை ஆரவாரமா? பொன்பூ வேங்கை மாலை தொடுத்து அணியும் தோழியர் ஆயத்துடன் இருப்பாள், அழல்எரி அசோகஇலை ஆடை உடுப்பாள் காண்பதற்கு இனிய ஒயிலுடன் நடப்பாள் தழைல் தட்டைக் கருவியொலி எழுப்பிப் பறைவகள் விரட்டித் தினைப்புனம் காப்பாள் தலைவியின் காட்டிலும் பொழிவாயா? இல்லை தப்பிப் பிழைத்துப் போய்விடுவாயா?
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————