அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள்
- அரசு சாரா நிறுவனங்கள் / அமைப்புகள் அரசு ஒத்துழைப்பு இன்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.
- இத்தகைய நிறுவனங்கள், அரசு நிதி மொத்தமாகவோ அல்லது ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
- அரசு சாரா நிறுவனம் / அமைப்புகள் என்பது உறுப்பினர்கள் தனி நபர் அல்லது நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சங்கமாகும்.
அரசு சாரா நிறுவன செயல்கூறுகள்
- அனைத்து உதவிகளையும் செய்தல்
- மீட்புப் பணியில் ஈடுபடுதல்
- சிறுபான்மையினருக்கு மனித வளத்தை மேம்படுத்துதல்
- உள்ளூர் அளவில் சேவை செய்தல்
- சமூக நிர்வாகத்திற்கு உதவி செய்தல்
- கல்வி அறிவை ஊக்குவித்தல்
- சுய மரியாதையை மேம்படுத்துதல்
- சமூக அளவிலான இடுவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்
- வயது வந்தோர் கல்வியை ஊக்குவித்தல்
- வருமான அதிகரிப்பு
- சேமிப்பு மற்றும் வங்கி சமூக நிறுவனம்
- முதன்மை உடல் ஆரோக்கியம்
- சிறு தொழில் வேளாண் உற்பத்தி
- அரசுடன் கூட்டு சேர்ந்து இயக்கப்படும்.
தங்கள் சேவைக்காக இந்திய அளவில் புகழ் பெற்ற அமைப்புகள்
ஹெல்பேஜ் இந்தியா
- முதியோர்களின் நலன் கருதி 1978-ம் ஆண்டு சாம்சன் டேனியல், ஜாக்சன் கோலே, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
- குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை காப்பதே இதன் பிரதான பணியாகும்.
- டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படுகிறது.
ஸ்மைல் பவுண்டேஷன்
- 2002-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமை காக்க தொடங்கப்பட்ட அமைப்பு.
- தலைநகர் டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை மீட்டு அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
- சிறந்த கல்வி, வாழ்க்கை முறை அளிப்பதே இதன் நோக்கம்.
கூன்ஞ் லிமிடெட்
- பத்திரிகையாளர் அனிஷ் குப்தாவால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- சாலையோரத்தில் வசிக்கும் ஏழை குழந்தைளுக்காக துணிகளை வாங்கி அளிக்கும் பணியை மேற்கொண்டது.
- டெல்லியிலிருந்து இது செயல்படுகிறது.
கிரை (குழந்தைகளின் உரிமையும் நீங்களும் – CRY)
- 1979-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் மேம்பாட்டுக்கு தொடங்கப்பட்டது.
- ரிப்பன் கபூர் என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்டு பெருநகங்களில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.
கிவ் இந்தியா
- 1999-ம் ஆண்டு உலகின் பகுதிகளிலிருந்தும் நிதி திரட்டும் அமைப்பாக தொடங்கப்பட்டது.
- சிறப்பாக செயல்படும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு
- இது நிதி உதவியை அளிக்கிறது. நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதியில் 90 சதவீதம் தொண்டுப் பணிகளுக்கு செல்வதை உறுதி செய்கிறது.