அரபியரின் வருகை : பின்னணி
- இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர்.
- இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்) கிழக்குக் (கோரமண்டல் / சோழமண்டல்) கடற்கரைகளில் குடியேறினர்.
- மலபார் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர், மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர்.
ஹிந்த்
- அரபியரும் ஈரானியரும் இந்தியாவை ஹிந்த் என்றும், இந்தியர்களை ஹிந்துக்கள் என்றும் குறிப்பிட்டனர்.
- அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், பர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தினார்.
- இந்தப் போரில் ஒரு முழுமையான வெற்றியை பிருத்விராஜ் பெற்றார்.
- பிருத்விராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக, அடுத்த ஆண்டில் (1192) முகமது கோரி அஜ்மீர் மீது படையெடுத்தார்.
- இரண்டாவது தரெய்ன் போரில்,பிருத்விராஜ் தோல்வி அடைந்தார்.
- தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக முகமது கோரி நியமித்தார்.
- கன்னோசி அரசர் ஜெயசந்திரரை எதிர்த்துப் போர்புரிய மீண்டும் விரைவிலேயே முகமது கோரி இந்தியா வந்தார்.
- ஜெயசந்திராவை எளிதாக வென்ற முகமது கோரி, ஏராளமான கொள்ளைச் செல்வத்துடன் திரும்பினார்.
வடஇந்தியாவின் முக்கிய அரச வம்சங்கள்:
- டோமர் (தில்லி)
- சௌகான் (ராஜஸ்தான்)
- சோலங்கி (குஜராத்)
- பரமர் (மால்வா)
- கடவாலா (கன்னோசி)
- சந்தேலர் (பந்தல்கண்ட்)
- துருக்கிய குதிரைப் படை, இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாயிருந்தது.
- ராஜபுத்திரப் படை யானைகளுடன் மையப்படுத்தி இருந்தது.
- யானைகளுடன் ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை.
- இது போரில், துருக்கியர்களுக்குச் சாதகமாக அமைந்தது.
- 1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்.
சான்றுகள்
- அல்–பெருனி: தாரிக்–அல்–ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
- மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத் – இ – நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
- ஜியாவுத்தின் பாரனி: தாரிக் – இ – பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.
- அமிர் குஸ்ரு : மிஃப்தா உல்ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்);
- கஜைன் : உல்ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் – பாரசீக மொழியில்)
- துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
- சம்ஸ் – இ–சிராஜ் அஃபிஃப்: தாரிக் இஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது).
- குலாம் யாஹ்யாபின் அஹ்மத்: தாரிக் –இ–முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
- ஃபெரிஷ்டா: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி).