Contents show
ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்
- விவசாயிகள் கிளர்ச்சி
- பழங்குடியினர் கிளர்ச்சி
விவசாயிகள் கிளர்ச்சி
பராசி இயக்கம்: 1818
- கிழக்கு வங்கத்தில் ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் பிரிட்டிஷின் நிலவருவாய் முறைக்கு எதிராக தொடங்கப்பட்டது.
- 1839-ல் ஷரியத்துல்லாவின் இறப்பிற்கு பின் அவரின் மகன் டூடு மியான் என்பவரால் இவ்வியக்கம் நடத்தப்பட்டது.
- “நிலம் கடவுளுக்கு உரியது என்ற கோஷத்தை ஏற்படுத்தி இப்போராட்டத்தில் சேர்த்தார். பல விவசாயிகளை
- 1862-ல் டுடுமியானின் இறப்புக்கு பின் அவரின் மகன் நோவா மியான் 1870 இவ்வியக்கத்தை மீண்டும் தொடங்கினார்.
வாஹாபி கிளர்ச்சி 1827
- வங்கத்தின் பராசத் எனும் பகுதியில் நிலச்சுவான்தார்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகவும் போராடிய இயக்கம் இதுவாகும்.
- வாஹாபி பிரசங்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட டிடுமிர் என்பரால் இக்கிளர்ச்சி வழி நடத்தப்பட்டது. எனவே இவ்வியக்கம் வாஹாபி இயக்கம் எனப்பட்டது.
- விரைவில் இவர் ஜமீந்தாரி முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் முக்கியத் தலைவராக மாறினார்.
சாந்தல் கிளர்ச்சி (1855 – 56)
- மஞ்சி என அழைக்கப்பட்ட சாந்தால்கள் ராஜ்மஹால் மலைக்கு அருகில் வாழ்ந்தனர்.
- நிரந்தர நில வருவாய் திட்டத்தின் மூலம் அவர்களின் நிலம் நிலச்சுவான்தார்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களால் பறிக்கப்பட்டது.
- இவர்களின் புதிய நிலம் டாமின் -இ-கோ (சாந்தால்களின் நிலம் என அழைக்கப்பட்டது.)
- ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டவர்களால் கடும் துன்பங்களுக்கு ஆளான அவர்கள் இரயில் பாதை கட்டுமான வேலைகளுக்கு எதிராக 1855-ல் கிளர்ச்சியில் இறங்கினர்.
- மகேஷ்பூர் போரில் இவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்த பின்பு அது அவர்களின் அடையாளமாக மாற்றப்பட்டது.
- *சித்து மற்றும் கண்ணு என்ற தலைவர்களின் கீழ் இக்கிளர்ச்சி நடத்தப்பட்டது.
- சார்லஸ் மெக்கன்சி அவுரி தொழிற்சாலையை இவர்கள் தாக்கினர்.
- பலகட்ட அடக்குமுறைகளுக்குப்பின் கிளர்ச்சி 1856-ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
- சாந்தால்களின் நிலத்தை பாதுகாக்க 1855- ல் ஒரு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி) 1859 – 60
- ஐரோப்பிய அவுரி செடி உற்பத்தியாளர்கள் குத்தகை விவசாயிகளை அவுரிசெடி வளர்க்க கட்டாயப்படுத்தியதோடு அதனை குறைந்த விலைக்கு விற்கவும் வற்புறுத்தினர்.
- செப்டம்பர் 1859-ல் நாடியா மாவட்டத்தில் அவுரி செடி வளர்க்க முடியாது எனக் கூறி திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னுசரண் பிஸ்வாஸ் என்பவர்கள் தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- பல தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது.
- இக்கிளர்ச்சியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து போராடினர்.
- இந்நிலையை மாற்ற 1860-ல் பிரிட்டிஸ் அரசு இண்டிகோ குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை 1862 சட்டத்தில் பகுதி VI ஆக சேர்த்தது.
- அவுரி செடி சாகுபடியாளர்களைப் பற்றி “இந்து தேசபக்தன்” இதழ் தொடர் செய்திகளை வெளியிட்டது.
- சாகுபடியாளர்களின் கிளர்ச்சியை பற்றி “நீல் தர்பன்” (Nil Darpan) எனும் நாடகத்தினை “தீன பந்து மித்ரா” என்பவர் எழுதினார்.
பாப்னா கலகம் 1873 – 1876)
- வங்கத்தின் பாப்னா மாவட்டத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக இக்கலகம் “கேசப் சந்திர ராய்” என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
- சட்டத்திற்கு புறம்பான முறையில் வற்புறுத்தி பல வரிகள் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது.
- சட்ட செலவீனங்களுக்காக மாநிலம் முழுவதும் நிதி வசூலிக்கப்பட்டதோடு, விவசாய
- சங்கங்கள் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட்டது.
- சிறிதளவான வன்முறைகள் மட்டுமே இப்போராட்டங்களில் நிகழ்ந்தன.
- போராட்டத்தின் விளைவாக சட்ட விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
தக்காண கலகம் 1875
- பூனா மாவட்டத்தில் மார்வாரி சௌகார் எனும் வட்டிக்காரர்களுக்கு எதிராக கலகம் ஏற்பட்டது.
- இவர்கள் வட்டிக்காரர்களின் வீட்டை கொள்ளையடித்தனர்.
- இராணுவத்தின் உதவியோடு இக்கலகம் முடிவுக்கு வந்தது.
- இதன் விளைவாக “தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்” 1879 ல் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் 1890 – 1900
- பஞ்சாப் விவசாயிகள் நகர்புற வட்டிகாரர்களின் அடக்கு முறைகளுக்கு எதிராக புரட்சி நடத்தினர்
- பஞ்சாப் விவசாயிகளை பாதுகாக்க “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1900-ல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டப்படி மூன்றுவகையாக மக்கள் வகைப்படுத்தினர்
- விவசாயிகள்
- சட்ட அங்கீகாரம் பெற்ற
- வட்டிக்கடைக்காரர்கள்
முதல்வகை மக்களின் நிலங்களை மற்றவர்களுக்கு விற்பதோ அடகுவைப்பதோ தடுக்கப்பட்டது.
மாப்ளா கிளர்ச்சி (1921)
- கேரளாவில் இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிக்கள்) மாப்ளா இஸ்லாமிய விவசாயிகள் மீது நடத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலகம் ஏற்பட்டது.
- 1920ல் நடைபெற்ற மலபார் மாவட்ட கூட்டத்தில் நிலவுரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையேயான உறவுகளுக்கு சட்டமியற்ற வேண்டினர்.
- ஆகஸ்ட் 1921ல் மாப்ளாக்கள் ஜமீன்தார்கள் அவர்களின் வீடுகள், காவல் நிலையங்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
- டிசம்பர் மாதத்தின் முடிவில் கலகம் பிரிட்டிஷின் கொடூரமான நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.