ஆங்கிலோ மராத்தியப் போர்கள் (1775 – 1818)

முதல் ஆங்கிலோ மராத்தியப் போர் (1775 – 1782):

காரணம்:

  • நாராயண ராவின் இறப்பிற்குபின் பேஷ்வா பதவிக்கான வாரிசுரிமைப் போரின் விளைவே இப்போராகும்.
  • கூட்டணி 1  – ரகுநாதராவ் பிரிட்டிஷ் (வாரன் ஹேஸ்டிங், கர்னல் அப்டன் கேப்டன் பாப்ஹாம்)
  • கூட்டணி 2 – மாதவ்ராவ் II, நானபட்னாவிஸ், மகாதேஜி சிந்தியா
  • ரகுநாத்ராவ் பதவியேற்றதை நானாபட்னாவிஸ் கூட்டணி எதிர்த்து நாராயணராவின் குழந்தை இரண்டாம் மாதவ்ராவை பேஷ்வாவாக ஏற்றுக் கொண்டனர்.
  • ரகுநாத ராவ் பிரிட்டிஷ் உதவியை நாடி அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.

1775- சூரத் உடன்படிக்கை

  • இவ்வுடன்படிக்கைக்கு பிரிட்டிஷ் உயர்மட்டக்குழு அனுமதி தரவில்லை. எனவே வாரன்ஹேஷ்டிங் கர்னல் அப்டன் என்பவரை தீர்வுகாண அனுப்பி வைத்தார்.
  • அப்டன் 1776-ல் புரந்தர் உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி ரகுநாத் ராவிற்கு அளித்த ஆதரவை நீக்குவதாக ஒப்புக் கொண்டது. இதற்கு பாம்பே அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
  • 1779-ல் மகாதாஜி சிந்தியா பிரிட்டிஷின் படையை தோற்கடித்து அவர்களை வதேகான் உடன்படிக்கையில் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினார்.
  • இதனால் வாரன்ஹேஷ்டிங் கேப்டன் பாப்ஹாம் என்பவரின்கீழ் படையை அனுப்பினார். இவர் சிந்தியாவை தோற்கடித்து குவாலியரை கைப்பற்றினார்.
  • பலகட்ட போருக்குப்பின் இருபிரிவும் அமைதி உடன்பாட்டிற்கு வந்தனர். மே 17, 1782-ல்
  • சல்பாய் உடன்படிக்கையின் மூலம் இப்போர் முடிவுக்கு வந்தது. இவ்வுடன்படிக்கையின் மூலம் பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே இருபது ஆண்டுகள் அமைதி நிலவியதோடு இரண்டாம் மைசூர் போரில் உதவியும் கிடைத்தது.
  • ரகுநாத்ராவ் ஓய்வூதியம் பெற்றதோடு மாதவராவ் II பேஷ்வாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

இரண்டாம் ஆங்கிலோ மராத்தியப் போர் (1803-1805)

  • 1794-ல் மஹாதாஜி சிந்தியாவின் இறப்பும். 1800-ல் நானாபட்னாவிஸ் இறப்பும் ஆங்கிலேயர்களுக்கு நன்மையை ஏற்படுத்தியது.
  • 1795-ல் இரண்டாம் மாதவ்ராவின் தற்கொலைக்குப்பின் இரண்டாம் பாஜிராவ், பேஷ்வா பதவியேற்றார்.

காரணம்:

  • யஸ்வந்த்ராவ் ஹோல்கருக்கும் தௌலத்ராவ் சிந்தியாவிற்கும் ஏற்பட்ட பகையில் பாஜிராவ் II தௌலத்ராவிற்கு ஆதரவு அளித்து போர் தொடுத்தார். யஸ்வந்த்ராவ் இப்படையை தோற்கடித்து பூனாவைக் கைப்பற்றினார்.
  • இதனால் பாஜிராவ் பிரிட்டிஷின் உதவியை நாடி பஸின் உடன்படிக்கை எனும் துணைப்படைத்திட்டத்தில் 1802-ல் கையெழுத்திட்டார்.
  • ஆர்தர் வெல்லெஸ்லி பூனாவை மீட்டு மீண்டும் பாஜிராவிடம் ஒப்படைத்தார்.
  • ஆனால் தெளலத்ராவ் சிந்தியாவும், ராஹோஜி போன்ஸ்லேயும் இவ்வுடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்பட்டதால் போர் துவங்கியது.  
  • 1803-ல் தௌலத்ராவ் தோல்வியடைந்து அர்ஜூன்கோன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
  • 1803-ல் ராஹோஜி தோல்வியடைந்து தியோகான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
  • யஸ்வந்த்ராவ் போரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் ஜெய்ப்பூரை தாக்கியபோது 1904-ல் பிரிட்டிஷார் போரை அறிவித்தனர். ஆனால், இவரை கட்டுப்படுத்த முடியாமல் போர் முடிவுற்றது.

மூன்றாம் ஆங்கிலோ மராத்தியப் போர் (1817 – 1818):

காரணம்:

  • பிரிட்டிஷாரை வெளியேற்ற இரண்டாம் பாஜிராவ் மராத்திய கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்றதால் ஹாஸ்டிங் பிரபு போரை அறிவித்தார்.

நபர்கள்:

  • பாஜிராவ்-II, முதோஜி போன்ஸ்லே, மல்காராவ் ஹோல்கர் (Vs) ஹஸ்டிங் பிரபு, தாமஸ் ஹிஸ்லாப்.
  • பாஜிராவ் பிரிட்டிஷ் படையால் காட்கி மற்றும் கோரேகான் பகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
  • நாக்பூரின் முத்தோஜி போன்ஸ்லே சீதபால்டி போரில் தோற்கடிக்கப்பட்டார்.
  • இந்தூரின் மால்கர்ராவ்-III மஹித்பூர் போரில் தோற்கடிக்கப்பட்டார். விளைவுகள்
  • பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டு பாஜிராவின் எல்லைப்பகுதிகள் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
  • சதாரா எனும் சிறிய அரசை நிறுவி சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங்கை அரசராக பிரிட்டிஷ் நியமித்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!