Contents show
ஆரிய சமாஜம் 1875 – பஞ்சாப்
- நிறுவியவர்: சுவாமி தயானந்த சரஸ்வதி.
- இயற்பெயர்: ‘மூல் சங்கர்‘ என்பதாகும்.
- இவர் சுவாமி விராஜனந்தரின் (Virjanand) சீடராவார்.
- வேதங்களை நோக்கிச் செல் (Go back to the Vedas) என்பதே இவரின் குறிக்கோளாகும்.
ஆரிய சமாஜம் பின்வரும் கோட்பாடுகளை எதிர்த்தது
- விலங்குகளைப் பலியிடுதல்
- உருவ வழிபாடு
- மூடப்பழக்கங்கள்
- சொர்க்கம், நரகம்
- புராணங்கள்
- பல கடவுள் வழிபாடு
- உருவ வழிபாடு
- பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள்
- புனித யாத்திரைகள்
- குழந்தை மணம்
- பலதார மணமுறை
- பர்தா அணியும் முறை
- சாதி வேறுபாடுகள்
- உடன்கட்டை ஏறும் வழக்கம்
ஆரிய சமாஜம் பின்வருவற்றிற்காக பாடுபட்டது
- பெண் கல்வி
- கலப்பு மணம்
- சமபந்தி உணவு முறை
- பெண்கள் முன்னேற்றம்
- தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்
- விதவைத் திருமணம்
- 1875 இல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது.
- மதம்மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக ‘சுத்தி இயக்கம்’ (Suddhi Movement) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
- ‘சுதேசி’ மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்தர் ஆவார்.
- இவர் இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்பட்டார்.
- வேதம் மற்றும் ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிப்பதற்காக தயானந்தா ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் (DAV Dayanand Anglo Vedic Schools) மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
- தயானந்தரின் முக்கிய சீடர்களான லாலாலஜபதிராய் லாலா ஹன்ஸ்ராஜ் மற்றும் பண்டித குருதத் ஆகியோர் ஆரிய சமாஜக் கொள்கைகளைப் பரப்பினர்.
- பாலகங்காதர திலகர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
- 1893இல் சிரதானந்தா பின்வரும் பிரச்சினைகளினால் ஆர்யசமாஜிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தினார்
- ஆங்கில வழி கல்வி மற்றும் சம்ஸ்கிருத கல்வி
- அசைவ உணவு மற்றும் சைவ உணவு
- சிரதானந்தா குருகுலவழி கல்வி மற்றும் அசைவ உணவை ஆதரித்தார்.
இராமகிருஷ்ண இயக்கம் கொல்கத்தா 1897
- நிறுவியவர்: சுவாமி விவேகானந்தர்.
- தலைமையிடம்: பேலூர், கொல்கத்தா.
- இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது
- இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் விவேகானந்தரும் ஒருவராவர்..
இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)
- வங்காளத்தில் ஓர் பிராமணக் குடும்பத்தில் 1836 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவரது துணைவியார் பெயர் சாரதாமணிதேவி.
- இவர் தட்சிணேசுவரம் என்னும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.
- பல வடிவங்களில் இருந்தாலும் கடவுள் ஒருவரே என்ற தீர்க்கமான கொள்கையைக் கொண்டிருந்தார்.
- ‘ஜீவன்’ என்பதே சிவன் எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே).
- மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாகக் கருதப்படும் என்று உறுதியாக நம்பினார்.
சுவாமி விவேகானந்தர் (1863-1902)
- இயற்பெயர்: நரேந்திரநாத் தத்தா
- துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் எனக் கூறிர்.
- 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு ‘என் சகோதர, சகோதரிகளே’ என தனது முதல் உரையின் மூலம், இந்தியப் பண்பாட்டின் சிறப்பையும் இந்து சமயத்தின் மேன்மையையும் உலகறியச் செய்தார்.
- சுவாமி விவேகானந்தர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார்.
- கல்விப் பணி, உடல் நலம், கிராம வளர்ச்சி, ஆதிவாசிகள் முன்னேற்றம் மற்றும் இளைஞர் நலம் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டு வருகிறது.
இவ்வியக்கம் போன்றவற்றை நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது.
- மருத்துவ மனைகள்,
- அறக்கட்டளை
- ஆதரவற்றோர் இல்லங்கள்,
- முதியோர் இல்லங்கள்,
- செவிலியர் பயிற்சிப் பள்ளிகள்.
- கல்வி நிறுவனங்கள்.
- பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள்,
- தொழிற்கல்வி பயிற்சி மையங்கள்
- உடல்நலம்,
- பேரழிவு நிவாரணம்,
- கிராம முன்னேற்றம்,
- ஆதிவாசிகள் முன்னேற்றம்
- இயற்கை சீற்றங்களான பஞ்சம், வெள்ளம், நிலநடுக்கம், புயல் மற்றும் கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல நிவாரண முகாம்களை நடத்தி மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.
- மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் (Photo Voltaic Lighting System) தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்தது இராமகிருஷ்ண இயக்கம் ஆகும்.
- ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் (UNESCO) தலைமை இயக்குநர் பெடரிக்கோ மேயர் (Federico Mayor) 1993 ஆம் ஆண்டில் சொற்பொழிவாற்றும் பொழுது 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் 1945 -ல் ஏற்படுத்தப்பட்ட ”யுனஸ்கோ’ வின் அமைப்பைப் போன்றே இருப்பதால்தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.