Contents show
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கு அடிப்படையாக நான்கு பிரிவுகள் இருந்தன.
- குடிமைப்பணிகள்
- இராணுவம்
- காவல்துறை
- நீதித்துறை
குடிமைப்பணிகள்
- குடிமைப் பணியாளர்களை இராணுவத்தினரிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இம்முறையை ஏற்படுத்தியது.
- இவர்களின் பணியாக சட்டத்தை செயல்படுத்துவதும், வருவாயை வசூலிப்பதுமே ஆகும்.
- கம்பெனியின் தொடக்ககாலத்தில் வர்த்தக வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இப்பிரிவு கம்பெனியின் எல்லை விரிவாக்கத்திற்குப்பின் பொதுப்பணியாக மாற்றப்பட்டது.
- தொடக்க காலங்களில் இவர்கள் இயக்குநர்கள் குழுவால் நியமிக்கப்பட்டதால் பல ஊழல்கள் நடைபெற்றன.
- குடிமைப்பணியில் முதல் சீர்திருத்தம் காரன்வாலிஸ் பிரபுவால் தொடங்கப்பட்டது. இவர் 1786-ல் தனிநபர் வர்த்தகத்தை தடை செய்து ஊதியத்தை அதிகரித்தார்.
- 1798-ல் வெல்லெஸ்லி பிரபு குடிமைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முடிவை அறிவித்து 1800-ல் ஒரு பயிற்சி கல்லூரியை வில்லியம் கோட்டையில் நிறுவினார். இந்த பயிற்சி மையம் பின்பு இங்கிலாந்தின் ஹெய்லி பெரி எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
- 1833 பட்டயச் சட்டம் குடிமைப்பணிகளில் போட்டித் தேர்வினை அறிமுகம் செய்தது. ஆனால் தேர்வு எழுதும் நபரினை இயக்குநர் குழு தேர்ந்தெடுத்தது. இது நியமன மற்றும் போட்டித்தேர்வு முறை எனப்பட்டது.
- 1853 பட்டயச் சட்டம் திறந்த முறையிலான போட்டித் தேர்வினை அறிமுகம் செய்தது. இம்முறையை 1858 சட்டம் உறுதி செய்தது. இச்சட்டம் உச்ச வயதினை 23-ஆக முடிவு செய்தது. ஆனால், 1860-ல் வயது வரம்பு 22 ஆகவும், 1866-ல 21 ஆகவும் மேலும் 1876-ல் 19 ஆகவும் மாற்றப்பட்டது.
- 1861-ல் இந்திய குடிமைப்பணி சட்டம் சில உயர்பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய ஒதுக்கீடு செய்தது. பின்பு இப்பணிகள் ஆட்சிப் பணிகளாக மாறின.
- 1863-ல் இரவீந்திரநாத் தாகூரின் அண்ணன் சத்யேந்திரநாத் தாகூர் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
- 1869-ல் சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திரதத் மற்றும் பிகாரிலால் குப்தா ஆகியோர் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனர்.
- பல படித்த இந்தியர்களும், தேசிய இயக்கங்களும் தேர்வினை இந்தியாவில் நடத்தவும்
- வயது வரம்பை உயர்த்தவும் கோரிக்கை விடுத்தனர்.
- இதன்விளைவாக 1892-ல் ஐசிஎஸ் தேர்வின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 23 ஆகவும் மாற்றப்பட்டது.
இஸ்லிங்டன் ஆணையம்
- 1912-ல் இங்கிலாந்து அரசு கோபால கிருஷ்ண கோகலே மற்றும் அப்துல் ரஹீம் என்ற இரண்டு இந்தியர்களையும் உள்ளடக்கிய அரசு ஆணையத்தை இஸ்லிங்டன் பிரபுவின் தலைமையின்கீழ் நியமித்தது.
- 1917-ல் இவ்வாணையத்தின் பரிந்துரையின்படி தேர்வை இந்தியமயமாக்கியது.
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
- 1918-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தக்குழு இந்தியர்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்தது.
லீ ஆணையம்
- 1923-ல் மீண்டும் அரசு ஆணையத்தை லீபிரபு என்பவரின் தலைமையின்கீழ் இங்கிலாந்து அரசு அமைத்தது.
- இக்குழு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒன்றை ஏற்படுத்துவதோடு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகியவற்றை இந்தியாவிற்கான அரசுச் செயலரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பரிந்துரைத்தது.
- உயர் குடிமைப் பதவிகளில் இந்தியர்களுக்கு 40% இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது.
- மேலும் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தது.
- இதன் பரிந்துரையின்படி 1926 இந்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய அரசுச்சட்டம் 1935
- இச்சட்டம் மூன்று பணியாளர் தேர்வாணையத்தை கொண்டு வந்தது.
- கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் – மத்தியில்
- மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் – மாகாணம்
- கூட்டு மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருசில மாகாணங்கள் இணைந்து.
இராணுவம்
- கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவம் சிப்பாய் இராணுவம் என அழைக்கப்பட்டது. இது ஐரோப்பிய முறையிலான இராணுவமாக செயல்பட்டது.
- இந்தியர்கள் இராணுவத்தில் உயர்பதவிகளுக்கு பதவியமர்த்தப்படவில்லை. ஒரு இந்தியர் அதிகபட்சமாக சுபேதார் பதவி வரை மட்டுமே பதவி உயர்த்தப்படுவார்.
- இந்திய இராணுவ வீரர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டதோடு குறைந்த ஊதியம் மட்டுமே அளிக்கப்பட்டது. ஒரு ஐரோப்பிய சிப்பாயின் ஊதியம் இந்திய சுபேதாரின் ஊதியத்தைவிட அதிகமாக இருந்தது.
- 1857-60 கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தில் 80 சதவீத வீரர்கள் இந்தியர்களாகவே இருந்தனர்.
- 1857 பெரும் கலகத்திற்கு பிறகு ஐரோப்பிய படைகள் அதிகரிக்கப்பட்டதோடு ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பு ஐரோப்பியரிடம் மட்டுமே அளிக்கப்பட்டது. CAL
காவல்துறை
- 1765 வரையில் இந்தியாவில் பழமையான காவல்முறையே பின்பற்றப்பட்டு வந்தது.
- வங்காளப் பகுதியில் ஜமீன்தாரால் ஊதியம் வழங்கப்பட்ட காவலர் கிராமத்தில் இருந்தனர். நகரங்களில் கொத்வால்களும் கிராப்புற மவட்டங்களில் ஃபாஜ்தார்களும் காவலர்களாக செயல்பட்டனர்.
- பக்சார் போருக்குப்பின் ஆங்கிலேயர்கள் காவல்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.
- 1791-ல் காரன்வாலிஸ் பிரபு நிரந்தர காவல் அமைப்பை வங்கத்தில் ஏற்படுத்தினார். இம்முறையின்படி ஜமீன்தார்கள் காவல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கல்கத்தாவில் காவல் ஆணையர் நியமிக்கப்பட்டார்.
- இவர் மாவட்டங்களை பல தானாக்களாகப் பிரித்தார். ஒவ்வொரு தானாவிற்கும் தலைமையாக ‘தரோகாக்கள்’ நியமிக்கப்பட்டனர்.
- 1802-ல் இக்காவல் அமைப்பு முறை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
- 1808-60 மாவட்ட கண்காணிப்பாளரின் நீதிபதிகளின்கீழ் இருந்த தானாக்கள் துணை காவல் கீழ்கொண்டு வரப்பட்டது. மேலும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
- பின்பு இம்முறை ஹேஸ்டிங் பிரபுவால் இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்பட்டது.
நீதித்துறை
- இராபர்ட் கிளைவால் கொண்டு வரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை 1772-ல் வாரன்ஹாஸ்டிங் பிரபு ஒழித்ததோடு நீதித்துறையும் அரசின்கீழ் கொண்டு வரப்பட்டது.
- 1773-ல் ஒரு தலைமை நீதிபதி மற்றும் மூன்று துணை நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் கல்கத்தாவில் கொண்டுவரப்பட்டது.
- இதன் முதல் தலைமை நீதிபதி “சர் எலிஜா இம்பே”.
- மாவட்டங்கள் தோறும் ஆட்சியரின்கீழ் குடிமையியல் நீதிமன்றமும் இந்திய நீதிபதிகளின்கீழ் குற்றவியல் நீதிமன்றமும் வாரன்ஹேஸ்டிங் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மேலும் இவர் குடிமையியல் வழக்கிற்காக திவானி அதாலத் மற்றும் குற்றவியல் வழக்கிற்காக ஃபாஜ்தாரி அதாலத் எனும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை ஏற்படுத்தினார்.
- இவரின் காலத்தில் “இந்து சட்டத்தொகுப்பு” ஹால்கெட் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
- 1801-ல் சென்னையிலும் 1823-ல் பம்பாயிலும் உச்சநீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.
- காரன்வாலிஸ் பிரபு காலத்தில் முன்சிப்கள் எனும் இந்திய நீதிபதிகள் கீழமை நீதிமன்றங்களில் பணியமர்த்ப்பட்டனர். இவர் பல கொடூர தண்டனைகளை ஒழித்தார்.
- 1793-ல் ஜார்ஜ் பார்லோ என்பவரால் முதல் சட்டத்தொகுப்பான காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
- வில்லியம் பெண்டிங் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை கலைத்துவிட்டு அலகாபாத்தில் பொதுவான மேல் முறையீட்டு நீதிமன்றங்களை ஏற்படுத்தினார்.
- மேலும் இவர் 1832-ல் ஜூரி முறையை வங்கத்தில் அறிமுகம் செய்தார்.
பல சட்டதொகுப்புகள்
- உரிமையியல் நடைமுறை சட்டத் தொகுப்பு – 1859
- இந்திய தண்டணை சட்டத் தொகுப்பு – 1860
- குற்றவியல் நடைமுறை சட்ட தொகுப்பு – 1861
- 1861 உயர்நீதிமன்ற சட்டத்தின்படி பம்பாய், கல்கத்தா மற்றும் சென்னையில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
- திருவாரூர் முத்துசாமி என்பவர் “சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்தியத் தலைமை நீதிபதி ஆவார்”.