இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக

  • இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து மதத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து இருந்து வருகின்றது.
  • 2014 ஜனவரியில் சமண மதத்தினருக்கும் (ஜைன மதம்) தேசிய அளவில் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Contents show

இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள்:

  • சிறுபான்மையினரை சமூக, கலாச்சார நடைமுறைகள், வரலாறு பின்னணியில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்:

  • மாறுபட்ட அடையாளங்கள் (ம) மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் சிறுபான்மையினரிடையே வாழ்க்கை, சொத்து (ம) நலவாழ்வு பற்றிய பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்குகிறது.

வகுப்புவாத சிக்கல்களால் உருவாகும் பதற்றநிலை (ம) கலவரங்கள்:

  • எந்தவொரு காரணத்திற்காக வகுப்புவாத பதற்றநிலை (ம) கலவரங்கள் நிகழும் போதெல்லாம் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
  • மதச்சார்பின்மையை முழுமையாக பின்பற்றுவதில் தொய்வு
  • இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடு என அறிவித்துள்ளது.
  • ஆனால் நடைமுறையில், முற்றிலும் மதம் சார்ந்து எழும் பிரச்சினைகள் கட்சிகளால் அரசியல்மயமாக்கப்படுகின்றன.
  • குடிமைப் பணிகள் (ம) அரசியலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லாமை:
  • அரசியலமைப்பு அதன் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம் சமவாய்ப்புகளை வழங்குகிறது.
  • சிறுபான்மை சமூகங்களிடையே அவர்கள் புறக்கணிக்கப்படும் உணர்வு நிலவுகிறது.

கல்வித்துறையில் பாகுபாடு:

  • சிறுபான்மையின குழந்தைகள் கல்வியில் பாகுபாடு, இடைநிற்றல் மற்றும் குறைந்த கல்வி தரத்திற்கு ஆளாகிறார்கள்.

வேலைவாய்ப்பில் பாகுபாடு:

  • சிறுபான்மையினர் வேலைவாய்ப்பில் பாகுபாடு, குறைந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு இல்லாமை ஆகியவற்றிற்கு ஆளாகிறார்கள்.

அரசியல் பங்கேற்பில் பாகுபாடு:

  • சிறுபான்மையினர் அரசியல் பங்கேற்பில் பாகுபாடு, குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் இல்லாமை ஆகியவற்றிற்கு ஆளாகிறார்கள்.

அரசு எடுத்துள்ள முயற்சிகள்:

பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டம்:

  • சிறுபான்மையினருக்கான இலக்குகள் / செலவினங்களுக்கு 15% ஒதுங்குதல் (ம) சிறுபான்மையினர் (அ) கணிசமான சிறுபான்மையின் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் மக்கள் பலன் அடைதல் (ம) நிதிப் பரவலைக் கண்காணித்தல்.

குறிக்கோள்கள்:

  • சிறுபான்மையினர் பள்ளிக்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல்.
  • பொருளாதார நடவடிக்கைகள் (ம) சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பினை உறுதி செய்தல்.
  • இனக்கலவரங்களைத் தடுத்தல் (ம) கட்டுப்படுத்துதல்.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்:

  • மத்திய அரசால் 1992ல் சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்க இவ்வாணையம் அமைக்கப்பட்டது.

உஸ்தாத் (USTTAD)

  • பாரம்பரிய கலைகள், கைவினைக் கலைகளால் சிறுபான்மையின் தங்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக திட்டம்

ஹமாரி தரோகர்:

  • சிறுபான்மையினர் சமுதாயத்தின் கலாச்சாரம் (ம) செழுமை வாய்ந்த மொழிப்படைப்புகள், பழமை வாய்ந்த ஆவணங்களை பாதுகாத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உரிய உதவி உறுதி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

நய் மன்ஸில் திட்டம்:

  • பள்ளி படிப்பில் இடைநின்றவர்களுக்கு மரபுசார் கல்வியும், திறன்களை வளர்க்கும் பயிற்சிகளையும் அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.

மாநில வக்பு வாரியங்களை பலப்படுத்துதல்:

  • மாநில வக்பு வாரியங்களின் பயிற்சி மற்றும் நிர்வாக செலவுகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • வக்பு சொத்துகளில் உள்ள அத்துமீறல்களை அகற்றுதல் மற்றும் வக்பு வாரியங்களின் மண்டல / பகுதி அலுவலகங்களை வலுப்படுத்துதல்.

நய் ரோஷினி:

  • அரசுசாரா நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு நிதியுதவி வழங்குதல்..
  • பெண்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவதன் மூலம் வரம்புகளின்றி முன்னேறிச் செல்ல உதவுதல்.

சிறுபான்மையினர் சைபர் கிராம் திட்டம்:

  • இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினர் மிகுதியாக உள்ள பகுதிகளில் கணினி தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.

பிரதான ஜன் விகாஸ் காரியக்ரம்

  • பலதுறை மேம்பாட்டுத் திட்டம்.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள்:

  • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி வழங்குகின்றன.

சிறுபான்மையினர் வணிகங்களுக்கு மானியங்கள்:

  • சிறுபான்மையினர் வணிகங்களுக்கு இந்திய அரசு மானியங்கள் மற்றும் கடன்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் சிறுபான்மையினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க உதவுகிறது.

சிறுபான்மையினர் பட்ஜெட்:

  • இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினர் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது. இந்த நிதி சிறுபான்மையினர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!