Contents show
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்
இந்திய தேசிய இயக்கத்தின் – மூன்று நிலைகள்
- மிதவாதி தேசியம் (1885 – 1905)
- தீவிரவாத தேசியம் (1906 – 1916)
- காந்தி காலம் (1917 – 1947)
மிதவாத தேசியம்
- பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
- கோரிக்கை மனுக்களை அளித்தல், தீர்மானங்கள் போடுதல், கூட்டங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், தூதுக்குழுக்கள் மூலம் பேச்சு நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர்.
- அரசியல் உரிமைகளையும் தன்னாட்சியையும் படிப்படியாக அடைவதே அவர்களது குறிக்கோளாகும்.
- ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை வரவேற்றது.
- 1886ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு தலைமை ஆளுநர் டப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார்.
- காங்கிரசின் கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பியது.
- தேசிய இயக்கத்தின் தொடக்க காலமான இந்த கட்டத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி ஏ.ஓ.ஹியூம், டபிள்யூ.சி.பானர்ஜி, , தாதாபாய் நௌரோஜி, பெரோஸ் ஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, பண்டிட் மதன்மோகன் மாளவியா, பக்ருதீன் தியாப்ஜி, நீதிபதி ரானடே, ஜி. சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முக்கிய தலைவர்களாக இருந்து வழி நடத்திச் சென்றனர்.
மிதவாதிகளின் முக்கிய கோரிக்கைகள்
- சட்டசபைகளை விரிவாக்குதல், சீர்திருத்துதல்
- ஐ.சி.எஸ்.தேர்வுகளை ஒரே சமயத்தில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடத்தி உயர் பதவிகளில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
- நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல்
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல்
- நிலவரியைக் குறைத்தல் – நியாயமற்ற நிலஉடைமையாளரிடமிருந்து குடியானவர்களை பாதுகாத்தல்
- உப்பு வரி, சர்க்கரை வரியை ஒழித்தல்
- ராணுவ செலவுகளைக் குறைத்தல்
- பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை கோருதல்.
- ரானடே, கோகலே போன்ற ஒரு சில மிதவாதிகள் சமூக சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தினர். குழந்தை திருமணம், விதவைகளின் அவலம் போன்றவற்றை அவர்கள் எதிர்த்தனர்.
- 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் மிதவாதிகளின் சாதனையாகும்.
மிதவாதிகளின் சாதனைகள்
- மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை மிதவாதிகளால் உருவாக்க முடிந்தது.
- ஜனநாயகம்,சிவில் உரிமைகள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் போன்ற சித்தாந்தங்களை அவர்கள் பிரபலப்படுத்தினார்கள்.
- பிரிட்டிஷார் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டுகிறார்கள் என்று அவர்கள் மக்களுக்கு புரியவைத்தனர்.
மிதவாத தலைவர்கள்
தாதாபாய் நௌரோஜி
- தாதாபாய் நௌரோஜி எழுதிய “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலில் செல்வச்சுரண்டல் கோட்பாட்டை விளக்கியிருந்தார்.
- இந்தியாவின் செல்வம் எந்தெந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டினார்.
அ. ஊதியங்கள்
ஆ. சேமிப்பு
இ. ஓய்வூதியங்கள்
ஈ. இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கான செலவினங்கள்
உ. பிரிட்டிஷ் வணிக நிறுவனங்களின் லாபம்
- இதைப்பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் வெல்பி குழுவை நியமித்தது. அதில் முதல் இந்திய உறுப்பினராக தாதாபாய் நியமிக்கப்பட்டார்.
- இந்தியாவிற்கான அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் இவர் கருதப்பட்டார்.
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் இவரே ஆவார்.
- ராஸ்ட் காப்தார் மற்றும் வாய்ஸ் ஆப் இந்தியா எனும் பத்திரிகைகளை நடத்தினார்.
- தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
சுரேந்திரநாத் பானர்ஜி
- வங்கப் பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
- 1876ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக இந்தியக் கழகம் ஒன்றை தோற்றுவித்தார்.
- அவர் நிறுவிய இந்திய தேசியப் பேரவை (1883) பின்னர் 1886ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
- பெங்காலி எனும் பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டார்
- சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியாவின் பர்க்’ என்று அழைக்கப்பட்டார்.
கோபால கிருஷ்ண கோகலே
- 1905 ல் அவர் இந்தியப் பணியாளர் கழகத்தை தோற்றுவித்தார்.
- நாட்டிற்காக தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சியளிப்பதே இக்கழகத்தின் நோக்கமாகும்.
- கோபால கிருஷ்ண கோகலே காந்தியின் குருவாக கருதப்பட்டவர்.
ஜி.சுப்ரமணிய அய்யர்
- சென்னை மகாஜன சபை மூலம் தேசியத்தை பரப்பினார்.
- ‘தி இந்து’ 1878 & ‘சுதேச மித்ரன்’ 1882 போன்ற பத்திரிக்கைகளையும் அவர் நிறுவினார்.
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் தீர்மானத்தை நிறைவேற்றினார்
தமிழ்நாட்டின் முக்கிய மிதவாதிகள்
- சீனிவாச சாஸ்திரி
- P.S. சிவசாமி
- V.கிருஷ்ணசாமி
- T.R.வெங்கட்ராமனார்
- G.A.நடேசன்
- T.M.மாதவராவ்
- S.சுப்பிரமணியனார்