Contents show
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் – வங்காளம் (1820-1891)
- வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார்.
- விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார்.
- அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்.
- பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.
- பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856 இல் டல்ஹவுசி பிரபுவால் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
- மற்றவர்களுக்கு முன்னோடியாக இவரது மகன் நாராயணச்சந்திரா ஓர் கைம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- 1860 இல் முதல்முறை திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும்.
- திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இது 1891-இல் பன்னிரெண்டாகவும், 1925 இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது.
- ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது.
பிரார்த்தனை சமாஜம் 1867
- பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம்.
- நிறுவியவர்: ஆத்மராம் பாண்டுரங் (1825-1898).
இந்த சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள்
- R.C பண்டர்கர்
- மகாதேவ் கோவிந்த் ரானடே
- இவ்விருவரும் சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர்.
- இச்சபை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப் பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்தியது.
- மகாதேவ கோவிந்தரானடே(1842-1901) இச்சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.
- மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய அமைப்புகளை நிறுவினார்
- விதவை மறுமணச் சங்கம் (1861)
- புனே சர்வஜனிக் சபா (1870)
தக்காணக் கல்விக்கழகம் (1884).
- ரானடே 1901 இல் இயற்கை எய்திய போது சந்தவர்க்கர் தலைமைப் பொறுப்பேற்றார்.