உயிரி உரங்கள் (Bio- Fertilizer)
- உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன.
- உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
உயிரி உரங்களின் வகைப்பாடு:
நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள்
- ரைசோபியம், அனபீனா அசோலா
பாஸ்பரஸை கரைக்கும் உயிரி உரங்கள்
- பெனிசிலியம், ஆஸ்பர்ஜில்லஸ்
பாஸ்பரசை திரட்டும் உயிரி உரங்கள்
- அமானிடா
நுண் ஊட்டசத்துக்களுக்கான உயிரி உரங்கள்
- பேசில்லஸ்
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா
- சூடோமோனாஸ்
உயிரி உரங்களின் பயன்பாடுகள்:
- நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் ஊக்குவிக்கும் பொருட்களின் மூலம் தாவர வளர்ச்சிக்கு இயற்கை ஊட்டச்சத்துக்களை சேர்க்கின்றன.
- உபரி உரங்கள் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவதை குறைக்க எதிர்ப்பார்க்கலாம்.
- உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சி முறையில் மீட்டெடுக்கின்றன. மற்றும் மண் உபிரினத்தை உருவாக்குகின்றன.
- உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான தாவரங்களை வளர்க்க முடியும்.
- ரைசோபியம், அஸோடோபாக்டர், அஸோஸ்பைரிலியம் மற்றும் நீல பச்சை பாசிகள் போன்ற உயிர் உரங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- ரைசோபூமினோலூலண்ட் கால்நடையியல் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- கோதுமை, மக்காச்சோளம், கடுகு, பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிப் பயிர்கள் போன்ற பயிர்களுடன் பயன்படுத்தப்படலாம்
- சோளம், கம்பு, கரும்பு மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கு அசோஸ்பைரில்லம் பரிந்துரைக்கப்படுகிறது.