- 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் பசியின் நிலையை வரைபடமாக்க உலக பட்டினி குறியீடாக வெளியிடப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 121 நாடுகளில் 107 வது இடத்தில் உள்ளது (“தீவிரமான வகை” கீழ்)
வெளியீட்டு நிறுவனங்கள்:
- உலக பட்டினி குறியீடு ஆனது Concern Worldwide மற்றும் Welthungerlife ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்படுகிறது.
ஆணை:
- பட்டினியை வரைபடமாக்குவதற்கான காரணம் “2030-க்குள் பூஜ்ஜிய பட்டினியை” உலகம் அடைவதை உறுதி செய்வதே ஆகும்-
- ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளில் இது ஒன்று ஆகும்.
- இந்த காரணத்திற்காகவே சில உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுவதில்லை.
பயன்படுத்தப்படும் அளவுகள்:
- உலக பட்டினி குறியீடு நான்கு முக்கிய அளவுகள் மூலம் வெவ்வேறு நாடுகளின் செயல்திறனைக் கண்காணிக்கிறது.
- ஊட்டச்சத்து குறைபாடு (இது போதிய உணவு இன்மையை பிரதிபலிக்கிறது)
- குழந்தை விரயமாதல் (இது ஊட்டச்சது குறைபாட்டின் கடுமைமையை பிரதிபலிக்கிறது)
- குழந்தை வளர்ச்சி குன்றியது (இது ஊட்டச்சத்தின் குறைபாட்டின் நாள்பட்ட நிலையை பிரதிபலிக்கிறது)
- குழந்தை இறப்பு (இது போதிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் இரண்டையும் பிரதிபலிக்கிறது)