உலோகத்தின் பண்புகள்
இயற்பண்புகள்
- .இயல்பு நிலை: எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திட நிலையில் உள்ளவை. (மெர்குரி மற்றும் காலியம் தவிர)
- பளபளப்புத் தன்மை: உலோகங்கள் அதிக பளபளப்பானவை
- கடின தன்மை: அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை கத்தியால் வெட்ட இயலும் மென்மை பெற்றவை)
- உருகுநிலை மற்றும் கொதிநிலை: வழக்கமாக, உலோகங்கள் அதி உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கும். அதிக வெப்பநிலையில், அவை ஆவியாகும். (காலியம், மெர்குரி, சோடியம், பொட்டாசியம் தவிர)
- அடர்த்தி: உலோகங்கள் அதிக அடர்த்தி பெற்றவை. (சோடியம் மற்றும் பொட்டாசியம் தவிர இவை தண்ணீர் விட அடர்த்தி குறைந்தவை)
- கம்பியாக நீளும் தன்மை: உலோகங்கள் கம்பியாக நீளும் தன்மையன. அவற்றை உடைக்காமல், கம்பியாக நீட்ட முடியும்.
- தகடாகும் தன்மை: உலோகங்கள் தகடாகும் தன்மை பெற்றவை. அதாவது, அவற்றை எந்த பிளவும் படாமல், அடித்தடித்து தகடாக மாற்ற முடியும்.
- வெப்பம் மற்றும் மின்கடத்தும் தன்மை: உலோகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் தன்மையன. எ.கா வெள்ளி, தாமிரம் (டங்கஸ்டன் தவிர)
- கரையும் தன்மை: வழக்கமாக உலோகங்கள் திரவ கரைப்பான்களில் கரைவதில்லை.
வேதியியல் பண்புகள்
- இணைதிற எலக்ட்ரான்கள்: உலோக அணுக்கள் பொதுவாக 1,2 அல்லது 3 எலக்ட்ரான்களை வெளிகூட்டில் பெற்றுள்ளன.
- அயனி உருவாதல் பண்பு: உலோகங்கள் எலக்ட்ரான்களை இழந்து நேர்மின் அயனிகளாக மாறும் தன்மை உடையவை, அதனால் அவை நேர்மின் சுமை பெறும். அயனி மின்சுமை இழத்தல்: உலோகங்களின் சேர்மங்கள் மின்னற்பகுத்தல் வினையின் போது, உலோக அயனிகள் எதிர்மின்வாய் வந்தடையும்.
- அணுக்கட்டு எண்: உலோக மூலக்கூறுகள், ஆவிநிலையில், ஒற்றை அணுக்கட்டு எண்ணைப் பெற்றுள்ளன.
- ஆக்சைடுகளின் தன்மை: உலோக பொதுவாக காரத்தன்மை உடையன.
Also Read
- Carbon / கார்பன்
- Nitrogen and their compounds / நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
- Fertilizer / உரங்கள்
- Pesticides / களைக்கொல்லி
- Insecticides / பூச்சிக்கொல்லி
- Blood and blood circulation / இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்கள்
- Endocrine system reproductive system / நாளமில்லா சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம்
- Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள்
- General Scientific Law / பொது அறிவியல் விதிகள்
- Heat, Light and Sound / ஒளி,ஒலி மற்றும் வெப்பம்
- Electricity and Electronics / மின்னியல் மற்றும் மின்னணுவியல்