ஐரோப்பியர்களின் வருகை – ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயர்கள் வருகை

  • ஆங்கிலேயர் வணிகர்களால் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு டிசம்பர் 31, 1600-ல் எலிசபெத் மஹாராணியால் பட்டயம் வழங்கப்பட்டது.
  • கம்பெனியின் அனைத்து செயல்களும் இயக்குநர் குழுவால் கட்டுப்படுத்தப்பட்டது.
  • கம்பெனியின் இயக்குநர் குழுவில் ஒரு ஆளுநரும் 24 இயக்குநர்களும் இருந்தனர்.
  • 1608-ல் அரசர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீரின் அரசவைக்கு கேப்டன் ஹாக்கின்ஸ என்பவரை அனுப்பினார். ஆனால் போர்த்துகீசியரின் செல்வாக்கின் காரணமாக அவரால் வர்த்தக மையம் தொடங்க அனுமதி பெற இயலவில்லை.
  • 1611-ல் தங்களது முதல் வணிகமையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.
  • 1613-ல் தாமஸ்பெஸ்ட் என்பவர் சூரத்தில் வணிகமையம் தொடங்க ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்.  
  • 1615-ல் ஜஹாங்கீரிடம் தாமஸ் ரோ என்பவர் வணிக உடன்படிக்கை செய்து ஆக்ரா, அஹமதாபாத் மற்றும் பரோச்சில் வணிகமையத்தை நிறுவினார்.
  • 1639-ல் பிரேசிஸ்டே என்பவர் சந்திரகிரி அரசர் சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் சென்னையை குத்தகைக்கு வாங்கி 1640-ல் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவினார்.
  • 1639-ல் சென்னைக்கு மாகாண அந்தஸ்து அளிக்கப்பட்டது.
  • 1661-ல் இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸிடமிருந்து பம்பாய் நகரை வாடகைக்கு வாங்கினர்.
  • 1680-ல் வங்காளத்தில் நிறுவனம் தொடங்க அனுமதி வாங்கினர்.
  • 1690-ல் சுதாநதியில் ஜாப் சார்னாக் என்பவரால் வணிகமையம் தொடங்கப்பட்டது. 
  • 1696-ல் வில்லியம் கோட்டை அங்கு கட்டப்பட்டது.
  • 1858 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை நிர்வாகம் செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!