முத்தையா கண்ணதாசன்
- கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
- கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.
- கண்ணதாசனின் தந்தை – சாத்தப்பன், தாய் – விசாலாட்சி ஆவர்.
- கண்ணதாசன் 1949ம் ஆண்டு கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
- கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
- கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
- கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் கண்ணதாசன்.
- காலக்கணிதம், இயேசு காவியம் ஆகிய நூலை இயற்றியவர் கண்ணதாசன்.
- காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான் கவிஞன் என்று கண்ணதாசனின் காலக்கணிதம் நூல் சொல்கிறது.
- கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இருந்து காலக்கணிதம் என்னும் பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
- இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்.
- மழைபொழிவு என்னும் பகுதி இயேசு காவியம் நூலில் உள்ளது.
- இயேசு காவியம் நூலில் உள்ள மழைபொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் பாடமாக தரப்பட்டுள்ளது.
- கண்ணதாசன், காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
- கண்ணதாசன் திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர்.
- கண்ணதாசன் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
- தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன்.
காலக்கணிதம் – கண்ணதாசன்
காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான் கவிஞன்.
காலக்கணிதம் என்னும் இப்பாடல் கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் உள்ளது.
கவிஞன் யானோர் காலக் கணிதம் புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் இவை சரியென்றால் இயம்புவதென் தொழில் இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை!
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! ***
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும் செல்வர் தங்கையில் சிறைப்பட மாட்டேன்
அவனும் யானுமே அறிந்தவை. அறிக! ***
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! ***
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்! உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்.
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! இல்லாயின் எமர் இல்லம் தட்டுவேன்
வண்டாயெழுந்து மலர்களில் அமர்வேன் பண்டோர் கம்பன், பாரதி தாசன் சொல்லாதன
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்! சில சொல்லிட முனைவேன்! ***
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது! ** இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு! **
கல்லாய் மரமாய்க் காடு மேடாக மாற்றம் எனது மானிடத் தத்துவம்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை தலைவர் மாறுவர், தர்பார் மாறும்.
மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்! **
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! ****
என்பதறிந்து ஏகுமென் சாலை! தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க! நானே தொடக்கம்: நானே முடிவு:
உள் வாய் வார்த்தை உடம்பு தொடாது நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்! ***
-கண்ணதாசன்
மலைப்பொழிவு முத்தையா கண்ணதாசன்
- இயேசு காவியம் நூலில் உள்ளது மழைபொழிவு கவிதை
- சீடர்களுக்கு இயேசுவின் சாந்தம் பற்றிய அறிவுரை
கவிதை
சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார் ***
இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர் என்றார்!
மாந்தரின் வாழ்வில் தேவைப்படுவது சாந்தம் தான் என்றார்
அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பார் என்றார்!
சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம்
அது தர்மம் ஒன்றை நம்பிய பிறகே அடங்கிவிடும் கலகம்!
ஓதும் பொருளாதாரம் தனிலும் உன்னத அறம் வேண்டும்
புவி உயர்வும் தாழ்வும் இல்லாதான வாழ்வினைப் பெற வேண்டும்.
இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என இயேசு பிரான் சொன்னார் ***
அவர் இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர் இது தான் பரிசு என்றார்
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் ***
அவர் தூய மனத்தில் வாழ நினைத்தால் எல்லாம் சோலை வனம்!
தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும் சண்டை சச்சரவு
தினம் தன்னாடு என்றும் பிறர் நாடு என்றும் பேசும் பொய்யுறவு! ***
இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண் கனவு தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு !
-கண்ணதாசன்
சொல்லும் பொருளும்
- சாந்தம் – அமைதி
- தாரணி – உலகம்
- மகத்துவம் – சிறப்பு
- தத்துவம் – உண்மை
- பேதங்கள் – வேறுபாடுகள்
- இரக்கம் – கருணை
கவிஞன் என்பவன் யார்?
- மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து தத்துவ நீர் பாய்ச்சி. அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
- காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான் கவிஞன்.
இயேசு காவியம் அறிமுகம்
- உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன.
- எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை கூறுகின்றது இயேசு காவியம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கவியரசு கண்ணதாசனும்
நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே
பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று
அமைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன்
-கம்பன்
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் இன்றி வேறு – யாரம்மா!
-கண்ணதாசன்
முந்தைய ஆண்டு வினாக்கள்
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
(A) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
(B) இராஜ தண்டனை
(C) மாங்கனி
(D) கொய்யாக்கனி