கலாப்ரியா (சோமசுந்தரம்) & ஞானக்கூத்தன் (அரங்கநாதன்)

கலாப்ரியா (சோமசுந்தரம்)

  • கலாப்பிரியாவின் இயற்பெயர் தி.சு.சோம சுந்தரம்.
  • கலாப்பிரியா பிறந்த ஊர் திருநெல்வேலி.
  • அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன் முதலில் இரங்கற் பா கவிதை எழுதிய கலாப்பிரியா (சோமசுந்தரம்).
  • குற்றாலத்தில் (மூன்று) 3 முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர் கலாப்பிரியா (சோமசுந்தரம்).
  • ‘கலாப்ரியா’ என்று தன் பெயரை பொருநையில் (வண்ணநிலவனின் கையெழுத்து இதழ) கவிதை எழுதும் போது தனக்குத் தானே சூட்டிக்கொண்டார்.
  • கலாப்பிரியா கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
  • கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
  • கலாப்பிரியா நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணியாற்றி நிறைவு பெற்றவர்.
  • “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக் கவிதைகள்” என பாராட்டயவர் தி.ஜானகிராமன்.

கலாப்பிரியா பெற்றுள்ள விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கிய விருது

கலாப்பிரியா எழுதியுள்ள கவிதைகள்

  • நான் நீ மீன்
  • எட்டயபுரம்
  • தீர்த்த யாத்திரை
  • உலகெல்லாம்
  • சூரியன்
  • வெள்ளம்
  • எல்லாம் கலந்த காற்று
  • வனம் புகுதல்
  • சுயம்வரம்
  • மாற்றாங்கே
  • அனிச்சம்
  • கலாப்பிரியா கவிதைகள்

கவிதை

கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய் பறித்துப் போடும் மேய்ப்பனை ஒரு நாளும் சிராய்ப்பதில்லை கருவமுட்கள். **

குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே ** வானம் தானாக உருவானது.

  • கலாப்ரியா

 

ஞானக்கூத்தன் (அரங்கநாதன்)

  • ஞானக்கூத்தனின் இயற்பெயர் அரங்கநாதன்.
  • ஞானக்கூத்தன் பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும்.
  • ஞானக்கூத்தனின் தாய்மொழி கன்னடம்.
  • அரங்கநாதன் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் வைத்துக்கொண்டார்.
  • ‘ழ’ இதழின் ஆசிரியராக இருந்தவர் ஞானக்கூத்தன்.

ஞானக்கூத்தன் துவங்கிய இதழ்கள்

  • கசடதபற
  • கவனம் (சிற்றிதழ்)

ஞானக்கூத்தன் எழுதியுள்ள நூல்கள்

  • சூரியனுக்குப் பின்பக்கம் பென்சில் படங்கள்
  • அன்று வேறு கிழமை
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக ஞானக்கூத்தன் போற்றப்படுகிறார்.

ஞானக்கூத்தனின் கவிதைகள் வெளியாகியுள்ள இதழ்கள்

  • கல்கி 
  • காலச்சுவடு
  • உயிர்மெய்
  • சி. மணியின் நடை சிற்றிதழ்
  • க.நா. சுப்பிரமணியத்தின் இலக்கிய வட்டம்

ஞானக்கூத்தன் பங்களிப்பு செய்துள்ள பத்திரிகைகள்

  • கணையாழி 
  • மையம் 
  • விருட்சம் (நவீன விருட்சம்)
  • ஞானக்கூத்தனின் கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!