பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை) – நல்லந்துவனார்
- அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள்.
- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய 9 பண்பு நலன்களை கூறுகிறது.
கலித்தொகை
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- கலித்தொகை கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
- கலித்தொகை நூற்று ஐம்பது (150) பாடல்களைக் கொண்டது.
- குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து (5) பிரிவுகளை உடையது கலித்தொகை.
நல்லந்துவனார்
- கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
- நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் நல்லந்துவனாரே.
பாடல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்**
பாடலின் பொருள்
இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்
அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்
நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்
சொல்லும் பொருளும்
- அலந்தவர் – வறியவர்
- கிளை – உறவினர்
- செறாஅமை – வெறுக்காமை
- பேதை யார் – அறிவற்றவர்
- நோன்றல் – பொறுத்தல்
- மறாஅமை – மறவாமை
- பொறை – பொறுமை
- போற்றார் – பகைவர்
கலித்தொகை கூறும் 9 பண்பு நலன்கள்
- வறியவர்களுக்கு உதவி செய்தல் – இல் வாழ்வு
- அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் – பாதுகாத்தல்
- சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் – பண்பு
- உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் – அன்பு
- அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் – அறிவு
- முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல் – செறிவு
- மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் – நிறை
- குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் – நீதி முறை
- தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் – பொறுமை
முந்தைய ஆண்டு வினாக்கள்
பாவகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்கள்
(A) பதிற்றுப்பத்து, பரிபாடல்
(B) கலித்தொகை, மதுரைக்காஞ்சி
(C) மலைபடுகடாம், நெடுநல்வாடை
(D) பரிபாடல், கலித்தொகை
(E) விடை தெரியவில்லை
“பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” -இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) பரிபாடல்
(B) கலித்தொகை
(C) நற்றிணை
(D) குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை
கீழ்கண்ட நூல்களுள் எட்டுத்தொகை நூல்
(A) நான்மணிக்கடிகை
(B) இன்னாநாற்பது
(C) கலித்தொகை
(D) நாலடியார்
(E) விடை தெரியவில்லை
கலித்தொகையைத் தொகுத்தவர்
(A) உக்கிரப் பெருவழுதி
(B) பாண்டியன் மாறன் வழுதி
(C) நல்லந்துவனார்
(D) நன்னன் சேய் நன்னன்
துள்ளல் ஓசையைக் கொண்ட நூல் எது?
(A) பரிபாடல்
(B) கலித்தொகை
(C) நற்றிணை
(D) குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) குறுந்தொகை
(B) அகநானூறு
(C) கலித்தொகை
(D) ஐங்குறுநூறு
கலித்தொகை ________ நூல்களில் ஒன்று.
(A) பத்துப்பாட்டு
(B) எட்டுத்தொகை
(C) பதினெண்கீழ்க்கணக்கு
(D) பதினெண்மேல்கணக்கு
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
(A) நாலடியார்
(B) நான்மணிக்கடிகை
(C) பழமொழி
(D) கலித்தொகை
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————