Contents show
கவிஞர் சு. வில்வரத்தினம்
- கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.
- கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் தலைப்பில் 2001ல் தொகுக்கப்பட்டுள்ளன.
- கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர் கவிஞர் சு. வில்வரத்தினம்.
- கவிஞர் சு. வில்வரத்தினத்தின் (இரண்டு) 2 கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
கவிதை
என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே!
வழி வழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர். வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே! ***
உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்! ***
காற்றிலேறிக் கனை கடலை, நெருப்பாற்றை, மலைமுகடுகளைக் கடந்து செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின் உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும்! ***
ஏடு தொடக்கி வைத்து என்னம்மை மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல் முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோர் பாடலை***
-சு. வில்வரத்தினம்
ஆறுமுக நாவலர்
- அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக காலோட்டப் புக்குழி’
-ஆறுமுக நாவலர்
பொருள்
‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’
ஆறுமுக நாவலர்
- ஆறுமுக நாவலர் காலம் 1822-1879.
- வசன நடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படுபவர் ஆறுமுக நாவலர்.
- ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.
- ஆறுமுக நாவலருக்கு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் பட்டம் வழங்கியது.
- பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் ஆறுமுக நாவலர் உதவினார்.
- தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார் ஆறுமுக நாவலர்.
- ஆறுமுக நாவலர், புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
- ஆறுமுக நாவலர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
ஆறுமுக நாவலர் எழுதிய பாட நூல்கள்
- பூமி சாஸ்திரம்
- இலக்கண நூல்கள்
ஆறுமுக நாவலர் பதுப்பித்த நூல்கள்
- சங்கர நமச்சிவாயர் விருத்தி உரை
- திருக்குறள் பரிமேலழகர் உரை
- சூடாமணி நிகண்டு உரை
- நன்னூல் உரை
ஆறுமுக நாவலரின் பன்முக ஆளுமைகள்
- பாடசாலை நிறுவுதல்
- அச்சுக்கூடம் நிறுவுதல்
- உரைநடை ஆக்கம்
- கண்டன நூல்கள் படைத்தல்
- தமிழ்நூல் பதிப்பு
- சைவ சமயச் சொற்பொழிவு
நீதிமன்றத்தில் ஆறுமுக நாவலரின் தமிழ்
- வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஆறுமுக நாவலர்.
- அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள்.
- தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார்.
- அவர் உடனே ‘அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார் ஆறுமுக நாவலர்.
- மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார்.
- அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார்.
- சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது ஆறுமுக நாவலர் கூறியதற்குப் பொருள்.
- இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர் தான் ஆறுமுக நாவலர்.