காற்றே வா! & காணி நிலம் – பாரதியார்

காற்றே வா! – பாரதியார்

  • காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம்
  • பாரதி எழுதிய காற்று (வசன கவிதை) நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
  • காற்றே வா நூலின் ஆசிரியர்பாரதி
  • காற்றே வா நூலின் மூல நூல்காற்று (வசன கவிதை)
  • காற்று (வசன கவிதை) நூலின் ஆசிரியர் – பாரதி 
  • காற்று நூலின் வடிவம்வசன கவிதை

கவிதை

காற்றே.வா.

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு **

காற்றே.வா.

எமது உயிர் நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே. பேய் போல் வீசி அதனை மடித்துவிடாதே **

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் (காற்றுக்கு) பாட்டுகள் பாடுகின்றோம். உனக்குப் (காற்றுக்கு) புகழ்ச்சிகள்

கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்***

சொல்லும் பொருளும்

  • மயலுறுத்து – மயங்கச் செய்
  • லயத்துடன் – சீராக
  • ப்ராண ரஸம்உயிர் வளி

காணி நிலம் – பாரதியார்

  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

கவிதை

காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும்

அங்குத் தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் 

அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்

அங்குக் கேணி அருகினிலே – தென்னை மரம் 

கீற்றும் இளநீரும் (10-12) பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும் ** 

நல்ல முத்துச் சுடர் போலே – நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம் தென்றல் வரவேணும்.

-பாரதியார்

சொல்லும் பொருளும்

  • காணி – நில அளவைக் குறிக்கும் சொல் 
  • மாடங்கள்மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம்உள்ளம்

பாடலின் பொருள்

  • காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.
  • இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்.
  • அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும்.
  • உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!