சட்டமறுப்பு இயக்கம்

சட்டமறுப்பு இயக்கம்

  • காந்தி பதினோரு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் கொடுத்தார் மேலும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனவரி 31, 1930 அன்று காலக்கெடுவையும் விதித்தார். அவற்றில் சில
  • ராணுவம் மற்றும் சிவில் சேவைகளுக்கான செலவினங்களை 50 சதவீதம் குறைத்தல்.
  • பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்துதல்.
  • அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
  • நில வருவாயை 50 சதவீதம் குறைத்தல்.
  • உப்பு வரியை ஒழிக்க வேண்டும்.

உப்பு சத்தியாகிரகம்

  1. மக்களின் கவனத்தை ஈர்க்க காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார், ஏனெனில் உப்பு என்பது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை.
  2. சட்டமறுப்பு இயக்கத்தை, பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் பொதுமக்களின் இயக்கமாக உப்பு சத்தியாகிரகம் மாற்றியது.

தண்டி யாத்திரை

  • காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12 ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
  • 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி, 25 ஆம் நாள் காந்தி தண்டியை அடைந்தார்.
  • அவர் உப்பு சட்டத்தை உடைத்து, ஒரு உப்பை கையில் அள்ளி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • காந்தி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எரவாடா சிறைக்கு அடைக்கப்பட்டார்.
  • ஜவஹர்லால் நேரு, கான் அப்துல் கபார் கான் மற்றும் பிற தலைவர்கள் விரைவாக கைது செய்யப்பட்டனர்.
  • செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட ‘குடைகிட்மட்கர்‘ இயக்கத்தை கான் அப்துல் கபார் கான் நடத்தினார். இந்த இயக்கத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் பலர் பாதிப்படைந்தனர். 
  • இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே இது மிகப் பெரியது. 90,000க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம்

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

  • தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது. 
  • திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போதுதான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1930 ஏப்ரல் 13 இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28 இல் முடிவடைந்தது.
  • T.S.S.ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C.சாமிநாதர் மற்றும் K.சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.
  • இவ்வணிவகுப்புக்கென்றே ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் புனைந்திருந்தார்.
  • வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் ராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.
  • உப்புச் சட்டத்தை மீறியதற்காக ராஜாஜி கைது செய்யப்பட்டார். 
  • உப்பு சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண் ருக்மணி லட்சுமிபதி ஆவார்

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்

  • T.பிரகாசம், K.நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • 1932 ஜனவரி 26 இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனிய ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.
  • சத்தியமூர்த்தி அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளை மறியல் செய்தார், ஊர்வலங்களைத் திட்டமிட்டார்.
  • N.M.R.சுப்பராமன் மற்றும் கு.காமராஜ் ஆகியோரும் முக்கியப் பங்கு வகித்தனர்.
  • 1932 ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூரில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டும் சென்ற ஊர்வலம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டது. ஓ.கே.எஸ்.ஆர்.குமாரசாமி என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன், தேசியக் கொடியை தூக்கிப் பிடித்தபடி பிடித்தவாறே விழுந்து இறந்தார். கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!