சி.சு. செல்லப்பா

  • சி. சு. செல்லப்பா சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • எழுத்து இதழை தொடங்கியவர் சி.சு. செல்லப்பா,
  • எழுத்து இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு. செல்லப்பா.
சி.சு. செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சுதந்திர தாகம்
  • தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
  • பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி ஜீவனாம்சம்
  • வாடி வாசல்
  • சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
  • சி.சு. செல்லப்பா புதினம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை முதலாக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.
வாடிவாசல் சி.சு. செல்லப்பா
கலித்தொகையில் ஏறுதழுவல்
  • கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்
  • அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆய மகள் தோள்.

கலி 103: 63-67

குறும்புதினம் – குறுநாவல்
  • அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை குறும்புதினம்.
  • குறும்புதினத்தை குறுநாவல் என்றும் சொல்வர்.
  • சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்று குறும்புதினத்தை கொள்ளலாம்.

குறிப்பு: வழுவு சொற்களுக்கு வாடிவாசல் பாடத்தை பார்க்கவும்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

சி.சு. செல்லப்பாவின் எந்த இதழ் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது?
(A) எழுத்தாணி
(B) எழுத்து
(C) அகரம்
(D) சிகரம்

சி.சு. செல்லப்பாவின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது?
(A) சுதந்திர தாகம்
(B) ஆங்கில மோகம்
(C) ஜீவனாம்சம்
(D) சுதந்திரப் பறவை

“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
(A) சிற்பி
(B) சி.சு.செல்லப்பா
(C) ந.பிச்சமூர்த்தி
(D) மு.மேத்தா
‘ஜீவனாம்சம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
(A) ஜெயகாந்தன்
(B) புதுமைப்பித்தன்
(C) அழ. வள்ளியப்பா
(D) சி.சு. செல்லப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!