சுயராஜ்ஜியக் கட்சி & சைமன் குழு 

சுயராஜ்ஜியக் கட்சி

  • சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் காங்கிரசில் புதிய செயல்பாடுகளை முன்மொழிந்தனர்.
  • அவர்கள் தேர்தல் அரசியலில் நுழைய விரும்பினர் மற்றும் தேசியவாதிகள் சட்டமன்றத்தை கைப்பற்றுவதன் மூலமும் தேசியவாத உணர்வைத் தூண்டுவதன் மூலமும் சட்டமன்ற செயல்பாட்டைத் தடுக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினர்.
  • சுயராஜ்ஜியம் என்றால் சுதந்திரம் அல்லது சுய ஆட்சிஎன்று பொருள்.
  • இந்தக் குழு சுயராஜ்ஜியவாதிகள் மற்றும் மாற்றத்தை விரும்புவோர் என்று அழைக்கப்பட்டது.
  • ராஜகோபாலாச்சாரி, வல்லபாய் படேல் மற்றும் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அணி மாற்றத்தை விரும்பாதோர் என்று அழைக்கப்பட்டனர்.
  • எதிர்ப்பு இருந்தபோதிலும் சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் 1 ஜனவரி 1923 இல் சுயராஜ்ஜிய கட்சியை உருவாக்கினர், இது பின்னர் காங்கிரஸின் சிறப்பு அமர்வால் அங்கீகரிக்கப்பட்டது.
  • சுயராஜ்ஜிய கட்சி “காங்கிரஸ் கிலாபத் சுயராஜ்ய கட்சி” என்று பெயரிடப்பட்டது.
  • தமிழ்நாட்டில், மக்களைத் திரட்டி காந்தியப் பாதையைத் தொடர சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார்.
  • சுயராஜ்ஜிய கட்சி, மத்திய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 101 இடங்களில் 42 இடங்களில் வெற்றி பெற்று நியாயமான முறையில் செயல்பட்டது.
  • தேசியவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்கான ஒரு தளமாக அவர்கள் சட்டமன்றத்தை திறம்பட பயன்படுத்தினர்.
  • மற்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு காலனித்துவ ஆட்சியின் பல மக்கள் விரோதச் சட்டங்களை அவர்களால் முடக்க முடிந்தது.

சுயராஜ்ஜிய கட்சியின் சரிவு

  • 1925ல் அதன் தலைவர் சி.ஆர்.தாஸ் இறந்த பிறகு சுயராஜ்ஜிய கட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
  • சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்த சிலர் அரசு பதவிகளை ஏற்கத் தொடங்கினர், “இந்து நலன்களை” பாதுகாப்பதாகக் கூறி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தொடங்கினர்.
  • முஸ்லீம் அடிப்படைவாதிகளும் இதேபோன்று தேசியப் போராட்டத்தின் மந்தநிலையால் ஏற்பட்ட இடத்தைக் கைப்பற்றி வகுப்புவாத உணர்வைத் தூண்டத் தொடங்கினர்.
  • வகுப்புவாத வெறியைக் கட்டுப்படுத்த காந்தி (1924 இல்) 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
  • சுயராஜ்ஜிய கட்சி 1926 இல் சட்டமன்றங்களில் இருந்து வெளியேறியது.

சைமன் குழு 

  • 1927 நவம்பர் 8 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசு இந்திய சட்ட ஆணையத்தை நியமிப்பதாக அறிவித்தது.
  • சர் ஜான் சைமன் தலைமையிலான ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு சைமன் குழு என்று பரவலாக அறியப்பட்டது.
  • சைமன் குழு வெள்ளையர்களை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருந்தது இந்தியர்களை அவமதிக்கும் செயலாக பார்க்கப்பட்டது.
  • எம்.ஏ.அன்சாரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு (டிசம்பர் 1927) ஆணையத்தைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
  • முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபாவும் இந்த முடிவை ஆதரித்தன.
  • ஆனால் தமிழ்நாட்டின் நீதிக்கட்சி மற்றும் பஞ்சாப்பும் ஆணையத்தை ஆதரித்தது.
  • ஆணையம் செல்லும் இடமெல்லாம் போராட்டங்களும், சைமனே திரும்பிப்போ என்ற முழக்கத்துடன் கருப்புக் கொடி அணிவகுப்புகளும் நடந்தன.
  • ஜவஹர்லால் நேரு மற்றும் ஜி.பி. பாண்ட் லக்னோவில் தாக்கப்பட்டனர். 
  • இந்தியா முழுவதும் பல இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • பஞ்சாப் நௌஜவான் பாரத் சபா, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிகள் மற்றும் இந்துஸ்தானி சேவா தளம் (கர்நாடகா) ஆகியவை முக்கியமானவை.
  • லாகூரில், லால் லஜபதிராய் பலத்த காயம் அடைந்து நவம்பர் 17, 1928 அன்று இறந்தார்.
  • 1929 பிப்ரவரி 18 அன்று சைமன் கமிஷன் சென்னை வருகை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கடையடைப்புகளால் வரவேற்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!