சுரதா

  • சுரதாவின இயற்பெயர் இராசகோபாலன்.
  • பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட காரணத்தினால் தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார் சுரதா.
  • சுப்புரத்தினதாசன் பெயரின் சுருக்கிய வடிவம் சுரதா என்தாகும்.
  • (பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்‘). உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் கவிஞர் சுரதா.
  • உவமைகளைப் பயன்டுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என்று சுரதா அழைக்கப்படுகிறார்.
  • சுரதா என்ற பெயரில் மரபுக்கவிதைகள் எழுதினார்.

சுரதா இயற்றியுள்ள நூல்கள்

  • தேன் மழை
  • மங்கையர்க்கரசி
  • அமுதும் தேனும்
  • துறைமுகம்
  • முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியவர் சுரதா.

சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்

  • இலக்கியம்
  • விண்மீன்
  • ஊர்வலம்

சுரதா பெற்றுள்ள விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது
  • பாரதிதாசன் விருது

காடு – சுரதா

  • காட்டின் வளமே நாட்டின் வளம்
  • கிளிக்கண்ணி பா வகை பாடல்
  • ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்து மதிப்பிடப்படுகிறது.

காடு – கிளிக்கண்ணி பா

  • காடு பாடல் சுரதா கவிதைகள் என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
  • காடு பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.
  • கிளியின் மொழியை போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப் பாடல் வகை கிளிக்கண்ணிஆகும்.

கவிதை

கார்த்திகைத் தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடி – கிளியே பார்வை குளிருமடி!

காடு பொருள் கொடுக்கும் காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே – கிளியே குளிர்ந்த நிழல் கொடுக்கும்!

குரங்கு குடியிருக்கும் கொம்பில் கனி பறிக்கும் மரங்கள் வெயில் மறைக்கும் கிளியே வழியில் தடையிருக்கும்! 

பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சரவங் கலங்கும் கிளியே நரியெல்லாம் ஊளையிடும்! 

அதிமதுரத் தழையை யானைகள் தின்றபடி புதுநடை போடுமடீ கூவுமடி! கிளியே பூங்கூயில் கூவுமடி

சிங்கம் புலி கரடி சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் திரியுமடி கிளியே இயற்கை விடுதியிலே! (காடு)

சுரதா

சொல்லும் பொருளும்

  • ஈன்று – தந்து
  • கொம்புகிளை
  • களித்திட – மகிழ்ந்திட
  • நச்சரவம்விழம் உள்ள பாம்பு
  • அதி மதுரம்மிகுந்த சுவை
  • விடுதிதங்கும் இடம் (காடு)

இதில் வெற்றி பெற – சுரதா

  • உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு.
  • கவிஞர் சுரதாவின் துறைமுகம்என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

உரைநடை – கவிதை

  • உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது உரைநடை.
  • சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது கவிதை என்பது.

கவிதை

விண் வேறு விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு மண் வேறு மண்ணோடு கலந்திருக்கும் மணல் வேறு பனித்துளியும் மழையும் வேறு புண் வேறு வீரர்களின் விழுப்புண் வேறு புகழ் வேறு செல்வாக்கு வேறு காணும் கண் வேறு கல்விக்கண் வேறு கற்றார் கவிநடையும் உரைநடையும் வேறு வேறு.*

ஆக்கும் வரை நாமதனை அரிசி என்றும், ஆக்கிய பின் சோறென்றும் சொல்லுகின்றோம் பூக்கும் வரை அரும்பென்றும் பூத்த பின்பே பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச் சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவந்தான் வசனம் **

யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதையாகும்

பழுத்திருந்தால் சாறு வரும் வயலில் தண்ணீர் பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும் அதுபோல்

இங்கே எழுத்திருந்தால் அசைகள் வரும்

இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள் வரும் தளைகள் சென்றே அழைத்திருந்தால் அடிகள் வரும் அடியின் கீழே அடியிருந்தால் தொடைகள் வரும் தொடைகள் நன்கு செழித்திருந்தால்

பாக்கள் வரும் இவற்றை யெல்லாம் தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும்.

-சுரதா

தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும் சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.

ஏமாந்தால் தளை தட்டும் வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீர் காசு தரும் செடியில் பூத்த பூ மீது வண்டு வந்து தங்கும் நல்ல புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்.

சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம் தமிழக்கவிதை தரவேண்டும் இந்த நாளில்

எருவினிலே பயிர் விளையும் சிறந்த கேள்வி எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்

அந்தி இரவினிலே குளிர் விளையும் நுணுக்கத் தோடே எழுத்தெண்ணி முன்னோர் போல் கற்று வந்தால், அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும் அறிவினிலே புகழ் விளையும் இவற்றையெல்லாம் பெரும்பாலும் அறியாமல்

எழுதுவோர்க்குப் புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும் ? **

-சுரதா

பா வகை : எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் (அகர வரிசைக்கு பயன்படும்)

அடவி  ,அரண்,  அரில், அழவம், அழுவம், அறல், ஆரணி

இயவு, இறும்பு

கணையம்,  கா,  காகம்,  கால்,  கான்

சுரம்,  தில்லம்

பதுக்கை,  பழவம்,  புரவு

பொச்சை,   பொதி,  பொழில்,  பொற்றை

மிளை,  முதை, முளரி,  முளி

வல்லை,  வனம்,   விடர்,  வியல்

முந்தைய ஆண்டு வினாக்கள்

உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? (3)
(A) நிலவுப் பூ
(B) சூரியகாந்தி
(C) தேன்மழை
(D) பூங்கொடி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. “சோகம் தராதவன் அசோகன்” என் என்று கூறியவர்
(A) சிற்பி பாலசுப்பிரமணியம்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) பாரதிதாசன்

“இரட்டைக் கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்? (2)
(A) முடியரசன்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) கண்ணதாசன்
பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கராக போற்றப்பட்டவர் யார்?
(A) வாணிதாசன்
(B) மோகன ரங்கன்
(C) சுரதா
(D) அப்துல் ரகுமான்

கீழ்க்கண்ட கூற்றுக்களைப் படித்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
1. உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி. இராசகோபாலன்
2. இவர் பழையனூரில் பிறந்தார்
3. துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்
4. தேன்மழை என்னும் கவிதைநூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது
(A) 1.4 ஆம் கூற்றுக்கள் சரியானது
(B) 1,3,4 ஆம் கூற்றுக்கள் சரியானது
(C) 1, 2, 4 ஆம் கூற்றுக்கள் சரியானது
(D) அனைத்து கூற்றுக்களும் சரியானது

“உரைநடையின் சிக்கனந்தான் கவிதை. ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனந்தான் அடக்கம்” என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்?
(A) அப்துல் ரகுமான்
(B) கல்யாண்ஜி
(C) கவிஞர் சுரதா
(D) கலாப்ரியா
‘பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம் – என்ற பாடலை இயற்றியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
‘உவமைக் கவிஞர்’ சுரதாவின் இயற்பெயர் என்ன?
(B) முத்தையா
(A) சந்திரசேகர்
(C) பாலசுப்பிரமணி
(D) இராசகோபாலன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!