சென்னை சுதேசி சங்கம் – 1852 & சென்னை மகாஜன சபை

ஆரம்பகால அரசியல்  இயக்கங்கள் 

  1. பிரிட்டிஷ் இந்தியக் கழகம்1851 வங்காளம்
  2. பம்பாய் கழகம்1852, தாதாபாய் நவ்ரோஜி
  3. கிழக்கு இந்திய கழகம்1866, லண்டன்
  4. சென்னை சுதேசி சங்கம்1852, கஜுலு லக்ஷ்மிநரசு செட்டி
  5. பூனா சர்வஜனச் சபை1870, மஹாதேவ் கோவிந்த் ரானாடே
  6. சென்னை மகாஜன சங்கம் 1884

சென்னை சுதேசி சங்கம் – 1852

  • ஆங்கிலேயர்களுக்கு எதிரான குறைகளை வெளிப்படுத்துவதற்கான முதல் முயற்சிகளில் ஒன்றாக கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும்  இன்னும் சிலரால் 26 பிப்ரவரி 1852 இல் சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association) உருவாக்கப்பட்டது.
  • எம்என்ஏவின் உருவாக்கத்திற்கு உத்வேகம் அளித்த கஜுலு லட்சுமிநரசு, சென்னை நகரத்தில் தொழிலதிபராக இருந்தார்.
  • 1853 பட்டயச்சட்டம் நிறைவேற்றும் முன் இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியைத் தொடர்வது குறித்து விவாதம் நடந்த பொழுது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சென்னை சுதேசி சங்கம் தனது குறைககள் தொடர்பான மனுவை சமர்ப்பித்தது. 
  • 1852 டிசம்பரில் சென்னை சுதேசி சங்கம் சமர்ப்பித்த மனுவில், ரயத்வாரி மற்றும் ஜமீன்தாரி நிலவருவாய் முறைகள் விவசாய வகுப்புகளை ஆழ்ந்த துயரத்தில் தள்ளிவிட்டதாக எம்என்ஏ சுட்டிக்காட்டியது.
  • மெதுவான மற்றும் சிக்கலான நீதித்துறை அமைப்பு குறித்தும் மனுவில் புகார் அளிக்கப்பட்டது.
  • கிறிஸ்தவ நிறுவன பள்ளிகளுக்கு நிதிஉதவி அளிப்பதை எதிர்த்தது.
  • எம்என்ஏ மனு மார்ச் 1853 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. 
  • இந்திய சீர்திருத்த இயக்கத்தின் தலைவரான எச்.டி. சேமோர், அக்டோபர் 1853 இல் சென்னைக்கு வந்தார்.
  • இருப்பினும், 1853 பட்டயச்சட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் அதன் ஆட்சியைத் தொடர அனுமதித்ததால், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களை பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான போராட்டத்தை சென்னை சுதேசி சங்கம் ஏற்பாடு செய்தது.
  • பதினான்காயிரம் தனிநபர்கள் கையெழுத்திட்ட இரண்டாவது மனுவை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு சென்னை சுதேசி சங்கம் அனுப்பியது. அதில் இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
  • லட்சுமிநரசு 1866 இல் இறந்தார், 1881 இல், சுதேசி சங்கம் இல்லாமல் போனது.
  • தனது மனுக்கள் மற்றும் அது தொடங்கிய போராட்டங்கள் மூலம் எழுப்பிய குறைகள் உயர் சாதி மற்றும் பணக்கார குழுவின் பார்வையில் இருந்து.
  • சுதேசி சங்கத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, விவசாயிகள் மீதான வருவாய்த்துறை அதிகாரிகளின் சித்திரவதைக்கு எதிரான போராட்டமாகும்.
  • இவர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணாமாக சித்திரவதை விசாரணைக்கு குழு ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவாக சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது
  • 1884 சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது.

சென்னை மகாஜன சபை

  • மெட்ராஸ் மகாஜன சபை (Madras Mahajana Sabha) என்பது தெளிவான தேசியவாத நோக்கங்களைக் கொண்ட தென்னிந்தியாவின் ஆரம்பகால அமைப்பாகும்.
  • சென்னை சுதேசி சங்கம் செயலிழந்த பிறகு, சென்னை மாகாணத்தில் அத்தகைய பொது அமைப்பு இல்லை.
  • பல படித்த இந்தியர்கள் இந்தச் சூழலை மாற்ற விரும்பியதால் மே 1884 இல் சென்னை மகாஜன சபை ஏற்படுத்தப்பட்டது.
  • 1884 மே 16 அன்று நடைபெற்ற தொடக்கக் கூட்டத்தில் முக்கிய பங்கேற்பாளர்கள்: G.சுப்ரமணியம், வீரராகவாச்சாரி, ஆனந்த சார்லு, ரங்கையா, பாலாஜி ராவ் மற்றும் சேலம் ராமசாமி.
  • சென்னை மகாஜன சபையின் இரண்டாவது மாகாண மாநாடு முடிந்ததும், பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் (INC) முதல் அமர்வில் கலந்து கொண்ட தலைவர்கள் சென்னை மகாஜன சபையை தேசிய காங்கிரசுடன் இணைத்தனர்.
  • பி.ரங்கய்யா அதன் முதல் தலைவராகவும், பி.ஆனந்தசார்லு செயலாளராகவும் செயல்பட்டார்.

குறிக்கோள்கள்

  • பொது நலன் சார்ந்த பல்வேறு பகுதிகளில் உள்ள பிரச்சினைகளில் மக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி அதை அரசாங்கத்திடம் முன்வைத்தல்.
  • இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் ஒரே நேரத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்
  • லண்டனில் உள்ள இந்திய கவுன்சில் ஒழிக்கப்பட வேண்டும்
  • வரி குறைப்பு.
  • சிவில் மற்றும் இராணுவ செலவினங்களைக் குறைத்தல்.
  • அதன் பல கோரிக்கைகள் 1885 இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • 1895 ஆம் ஆண்டு டிசம்பரில், இந்தியாவின் வைஸ்ராய் எல்ஜின் பிரபு சென்னைக்கு வருகை புரிந்தபோது, சென்னை மகாஜன சபையின் வரவேற்பு உரையை ஏற்க மறுத்துவிட்டார்.
  • 1920 முதல் இந்திய தேசிய காங்கிரஸுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டது. இதன் விளைவாக, 1930 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி, சென்னை ஜார்ஜ் நகரம், எஸ்பிளனேட், உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரை பகுதிகளில் உப்பு சத்தியாகிரக இயக்கத்தை சபை ஏற்பாடு செய்தது.
  • சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சட்டப்பூர்வ விசாரணை நடத்துமாறு சபை வலியுறுத்தியதால், நீதிபதி டி.ஆர்.ராமச்சந்திரர் தலைமையிலான மூவர் குழு முப்பது பேரிடம் விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • ஆங்கிலேய அரசு காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தபோது, ​​மதராஸ் மகாஜன சபை, அகில இந்திய காதி கண்காட்சி, சுதேசி கண்காட்சி என நம் நாட்டு மக்களின் உள்ளங்களில் தேசபக்தியை தூண்டும் வகையில் ஏராளமான கண்காட்சிகளை நடத்தியது.
  • மகாத்மா காந்திஜி 1896 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்ற மகாஜன சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
  • பண்டித ஜவஹரலால் நேருவும் சபையின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!