- பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர்.
- கிசர்கான் (1414 -1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை (1414 -1451) நிறுவினார்.
Contents show
முபாரக்ஷா (பொ.ஆ. 1421-1434)
- பொ.ஆ.1421 இல் கிசர்கானின் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் முபாரக்ஷா மன்னரானார்.
- இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
- யமுனை நதிக்கரையில் “முபாரக் பாத்“ என்னும் நகரை நிர்மானித்தார்.
முகமது ஷா (பொ.ஆ. 1434-1445)
- லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடி உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார்.
- இவ்வெற்றிக்குக் காரணமான பஹ்லுல் லோடிக்கு ‘கானி கானா’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.
ஆலம்ஷா
- தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சையத் வம்சத்தில் வந்த ஆலம்ஷா