- பாபர் 1483 பிப்ரவரி 14 இல் பிறந்தார்.
- அவருக்கு ஜாகிருதீன் (நம்பிக்கையைக் காப்பவர்) முகமது எனப் பெயரிடப்பட்டது.
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் ஜாகிருதீன் முகமது பாபர் ஆவார்.
- ‘முகல்’ என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம்.
- தம் தந்தையார் வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார்.
- தாய்வழியில் அவருடைய தாத்தா, தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார்.
- இவர் மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார்.
- பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை பெற்றவராவார்.
- தனது வாழ்க்கையைப் பற்றிய பாபரின் நினைவுக் குறிப்புகளான துசுக்-இ-பாபரி (பாபர் நாமா) உலகச் செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
- இந்நூலை அக்பரின் வேண்டுகோளுக்கிணங்க அப்துல் ரஹீம் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.
- வில்லியம் எர்ஸ்கின் லெய்டன் ஆகியோரால் இந்நூல் ஆங்கிலத்திலும், பாவெட்டி கோர்ட்லி என்பவரால் பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
முகலாயப்பேரரசு – அடித்தளம் அமைத்தல்
- 1505 இல் காபூலைக் கைப்பற்றிய பாபர், அதே ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது முதற்படையெடுப்பை மேற்கொண்டார்.
- பாபருக்கு மிகச் சிறந்த வாய்ப்பு தேடிவந்தது. தௌலத்கான் லோடியின் மகன் திலாவார்கான், டெல்லிசுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.
- டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டே அவர்கள் வந்திருந்தனர்.
- 1526 இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார்.
- இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவை தலைநகராகக் கொண்டு துவங்கியது.
முதலாம் பானிப்பட் போர் (ஏப்ரல் 21, 1526)
- பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கையில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார்.
- பீரங்கிப் படையை (Artillery) திறம்படப்பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன.
- தில்லியையும் ஆக்ராவையும் பாபர் கைப்பற்றினார். ஆனாலும் ராஜபுத்திரர், ஆப்கானியர்களை முறியடிக்க வேண்டியிருந்தது.
பீரங்கி
- பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு artillery ஆகும்.
- வெடிமருந்து முதன்முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொ.ஆ.13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது.
- பதினான்காம் நூற்றாண்டின் இடைப்- பகுதியிலிருந்து இது துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது.
- பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
- இவரது துலுக்மா என்ற போர் முறை மராத்தியரின் கொரில்லாப் போர் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.
கான்வா போர், 1527
- சித்தூரின் ராணா சங்காவை போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தீர்மானித்தார்.
- பாபர் ராணா சங்காவின் படைகளைத் தோற்கடித்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து குவாலியர், கோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன.
- இந்த வெற்றிக்குப் பிறகு பாபர் ‘காஸி‘ என்ற பட்டத்தை ஆட்டிக் கொண்டார்.
சந்தேரிப் போர், 1528
- சந்தேரியில் மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போராகும்
- இவ்வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்து வரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.
காக்ரா போர். 1529
- ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும்.
- சுல்தான் இப்ராகிம் லோடி சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகளான சுல்தான் நஸ்ராவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர்.
- ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார்.
- கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார்.
- ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530 இல் காலமானார்.
- பாபர் தனது மகன் ஹூமாயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டுச் சென்றார்.