தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்
- பல்வேறு துறைகளில் சேவைகளின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளப் பயனாளர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது.
- தொலைத்தொடர்புப் பிணையங்கள் அல்லது இணையம் வழியாக வழங்கப்படும் சேவைகளைத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் என்கிறோம்.
- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பெருமளவு வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன.
- சொல்செயலிகள், விரிதாள்கள், தரவுத்தளங்கள் ஆகியவை, பல்வேறு மரபுவழிப்பட்ட சேவைகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாற வழி வகுத்துள்ளன.
- மறைமுகப் பயன்கள் சிறிதுகாலம் கழித்துக் கிடைக்கப்பெறும். ஒரு பயனுக்கென சேகரிக்கப்பட்ட தரவுகள் வேறுபல தேவைகளுக்கும் சிறிது காலத்துக்குப் பின் பயன்படும்.
- மின் – அரசாண்மை
- அழைப்புதவி மையங்கள்
- தரவு மேலாண்மை
- தொலை மருத்துவம்
- மருத்துவ ஆவணப் பெயர்ப்பு
- கணிப்பொறித் தரவாக்கம்
- வலையகச் சேவைகள்
- வணிகச் செயலாக்கப் புறத்திறனீட்டம், துடிமத் தகவல் உருவாக்கம்), அசைவூட்டம், மனிதவளச் சேவைகள் சேய்மைப் பராமரிப்பு ஆகியவை ஐ.டீ.இ.எஸ். ஊடுருவியுள்ள பிற வேவைகளாகும்.
- ஐ.டீ.இ.எஸ். பணிகளுக்கு, தகவல் தொழில்நுட்பத்தில் குறிப்பாக தரவுத் தளங்களிலும், இணையத்திலும் செய்முறை அறிவுத்திறன் தேவையாகும்.
- தவிரவும், ஆங்கிலத்தில் சிறந்த தொடர்புத்திறன் இருக்க வேண்டிய கட்டாயத் தேவையாகும்.
- ஐ.டீ.இ.எஸ். சேவைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு, தகவல் தொழிலகப் பயன்பாடு, செய்தொழில் நுட்பம், நற்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய அகத்திறனில் முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மின்-ஆளுகை
- நீங்கள் அரசு வலையகங்களைப் பார்வையிடவும் அவை வழங்கும் சேவைகளைப் பெறவும் கணிப்பொறிகள் உங்களுக்கு உதவுகின்றன.
- அரசு அமைத்துள்ள பல்வேறு வலையகங்கள் பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளன.
- அரசுத் துறைகள் பற்றிய விவரங்கள், குறிப்பிட்ட பணிகள், சிறப்பு நலத்திட்டங்கள், ஆவணங்கள், தொடர்புகள், தொடுப்புகள், ஐஏஎஸ் அக இணையம், வலையக வரைபடம், தேடல், புதியது என்ன, பத்திரிகைக் குறிப்புகள், கருத்தாய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
- இந்த வலையகங்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளன.
அழைப்புதவி மையங்கள்
- தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது.
- தகவல் தொழில்நுட்பச் சேவைகளின் பயனாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதிலும் நிறைந்துள்ளனர்.
- ஆண்டில் நாட்களும், நாளில் மணிநேரமும் தகவல் தொடர்பு சேவையை நிறுவனங்கள் வழங்கவேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- அழைப்புதவி மையம் என்பது, சில வேளைகளில், குறிப்பிட் வாடிக்கையாளர் சேவைக்காக தொலைபேசி அடிப்படையில் அமைந்த சேவைப் பகிர்வு மையம் என வரையறுக்கப்படுகிறது.
- காரணம் இம்மையங்கள், சந்தைப்படுத்துதல் விற்பனை தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
- ஒவ்வோர் அழைப்புதவி மையமும் போதுமான அளவு தொலைத்தொடர்பு வசதிகளையும், பயிற்சிபெற்ற ஆலோசகர்களையும் கொண்டுள்ளன.
- மிகப்பரந்த தரவுத் தளங்கள், இணையம் மற்றும் பிற நிகழ்நேரத் தகவல் உதவி மையங்களை, அணுகும் வசதிகளைப் பெற்றுள்ளன.
- வாடிக்கையாளர்களுக்கு தகவலையும், உதவிச் சேவைகளையும் அழைப்புதவி மையங்கள் வழங்குகின்றன.
- இவை ஆண்டில் அனைத்து நாட்களிலும், நாளில் அனைத்து நேரங்களிலும் அதாவது சேவை செயல்படுகின்றன.