மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
- குறிக்கோள்: பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோரின் மகளுக்கு திருமண உதவி அளித்தல் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்தல்.
- மணப்பெண் 10வது வகுப்பு படித்திருந்தால் (18 வயது) 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு
- மணப்பெண் டிகிரி / டிப்ளமோ முடித்திருப்பின் (21 வயது)-ரூ.50,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி உடையவர்.
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
அன்னை தெரேசா நினைவு காப்பக பெண்கள் திருமண உதவித் திட்டம்.
- குறிக்கோள்: வறிய நிலையிலுள்ள காப்பக பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்தல்.
- மணப்பெண் 10வது தேர்ச்சி (18 வயது) – 25,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக்காசு.
- மணப்பெண் டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி (21 வயது) 50,000 ரூ. காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்
- குறிக்கோள்கள்: விதவைகளின் மறுவாழ்வை உறுதி செய்ய மறுதிருமணத்தை ஊக்கப்படுத்தல்.
- மணப்பெண் 10வது படித்திருப்பின்: 15,000ரூ காசோலை, ரூ. 10,000 NSC பாண்டு, 8 கிராம் தங்கக்காசு
- மணப்பெண் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்திருப்பின் : ரூ.30,000/ காசோலை, NSC பாண்டு ரூ.20,000/-, 8 கிராம் தங்கக் காசு.
- .வயது வரம்பு 20 – 40வயது
- திருமணத்திற்கு 6 மாதத்திற்கு முன்னரே விண்ணப்பித்தல்
- கீழ்காணும் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
- முதல் கணவன் இறந்ததற்கான இறப்புச் சான்று
- திருமணப் புகைப்படம், விதவை சான்றிதழ், முதல்/இரண்டாம் திருமண அழைப்பிதழ்
- சாதிச் சான்றிதழ், 10வது மதிப்பெண் பட்டியல், டிகிரி சான்றிதழ், போன்றவை
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய விதவையின் பெண்ணுக்கான திருமண உதவித் திட்டம்:
- குறிக்கோள்கள்: மகளின் திருமணத்திற்கு நிதி உதவி அளிப்பதன் மூலம்
- வறுமை நிலையிலுள்ள விதவை தாய்க்கு உதவுதல்.
- வறிய விதவையின் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுகிறது.
- மணப்பெண் 10வது தேர்ச்சி (18 வயது) பெற்றிருப்பின் -ரூ.25,000 காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
- மணப்பெண் டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பின் (21 வயது) ரூ. 50,000/- காசோலை, 8 கிராம் தங்கக் காசு.
- ஆவணங்கள்:
- 10 வது மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், கைம்பெண் சான்றிதழ், கணவரின் இறப்பு சான்றிதழ்.
- வருமானச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ்.
- விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச் சான்றிதழ்.
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி மறுப்பு திருமண உதவித் திட்டம்:
- மணப்பெண் 10வது படித்திருப்பின் – ரூ. 15,000 காசோலை, NSC பாண்டு ரூ.10,000/-, 8 கிராம் தங்கக் காசு.
- மணப்பெண் டிகிரி / டிப்ளமோ படித்திருப்பின் ரூ. 30,000/- காசோலை, NSC பாண்டு ரூ.20,000/-, 8 கிராம் தங்கக் காசு.
- திருமணத்திற்கு 2 வருடம் முன்பே விண்ணப்பித்தல்.