மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்):
- பிறப்பிலேயே, பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத அடையாளம் மற்றும் வெளிப்பாடு கொண்ட நபர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
வாரியத்தின் அமைப்பு
- மூன்றாம் பாலினரின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களையும், 12 மூன்றாம் பாலினர்களை அலுவல்சாரா உறுப்பினர்களாகக் கொண்ட மூன்றாம் பாலினர் நல வாரியம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
- மூன்றாம் பாலினருக்கு மறுவாழ்வு மற்றும் சமுதாயத்தில் சம உரிமை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்.
வாரியத்தின் குறிக்கோள்
- மூன்றாம் பாலினருக்கான சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்.
வாரியத்தின் உறுப்பினராக தகுதிகள்
- தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
- தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும்
வழங்கப்படும் உதவிகள்
- அடையாள அட்டை
- உணவுப் பொருள் வழங்கும் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- வீட்டுமனைப் பட்டாக்கள்
- மருத்துவ வசதிகள்
- இலவச வீட்டு வசதி
- கல்வி உதவித் தொகை
- திறன் வளர்க்கும் பயிற்சிகள்
- சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல்
- பொருளாதார செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல்
- குறுகிய கால தங்கும் இல்லங்கள்
நலத்திட்டங்கள்
- மூன்றாம் பாலினர்களுக்கு மானியம் வழங்கி, மளிகை கடை அமைத்தல், கறவை மாடுகள் வளர்த்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், துணி, கயிறு, அரிசி, காய்கறி வியாபாரம், ஆட்டோ ஓட்டுதல் மற்றும் சரக்கு ஆட்டோ ஓட்டுதல் போன்ற தொழில்களை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
- அனைத்து மூன்றாம் பாலினர்களும் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள சிறப்பு முயற்சியாக ஒரு செயலி உருவாக்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மூன்றாம் பாலினத்தோர் பற்றிய கணக்கெடுப்பு மற்றும் தகவல்கள் சேகரித்திட தமிழ் நாடு மூன்றாம் பாலினர் நல வாரியம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.